search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.ராஜ்"

    எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் மெரினா புரட்சி படத்திற்கு மத்திய தணிக்கைக்குழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #MarinaPuratchi
    இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்த எம்.எஸ்.ராஜ் என்பவர் மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாக கொண்ட இந்த கதையில் அந்த போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை அழுத்தமான பதியப்பட்டு இருந்தது.

    ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய புலனாய்வு படமாக உருவாகி இருந்த மெரினா புரட்சி படம் தணிக்கை குழுவுக்கு சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த மத்திய தணிக்கை குழு படத்திற்கு தடை விதித்திருக்கிறது.



    இது குறித்து எம்.எஸ்.ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் ’தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது. மறுசீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும். உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்’ என்று கூறி இருக்கிறார். #MarinaPuratchi

    ×