search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூடான்"

    • துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
    • ரஷிய விமானம் ஆயுதங்களை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார்டூம்:

    சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத் தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

    இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனால், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சூடானின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷிய சரக்கு விமானத்தை அதிவிரைவு ஆதரவு படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ரஷிய ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் சூடானின் டார்புர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய விமானம் ஆயுதங்களை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.

    • கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர்.
    • சுமார் 80 கிராமவாசிகளை பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.

    உள்நாட்டுப் போர் 

    உள்நாட்டுப் போரினால் சூடான் நாடு துண்டாடப்பட்டு வருகிறது. சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF [பாராளுமன்ற படை] ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது. 

    பசி -  பஞ்சம் - பாலியல் பலாத்காரம் 

    இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பசியால் மக்கள் மண்ணையும், இலைகளையும் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உணவுக்காக தினமும் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட பெண்கள் வரிசையில் நிற்கும் அவல நிலையில்தான் தற்போது சூடான் உள்ளது.

     

     

     

    பாராளுமன்றப் படுகொலை

    இந்நிலையில் மத்திய சூடானில் உள்ள சினார்[Sinnar] மாகாணத்தில் ஜால்க்னி [Jalqni] என்ற கிராமத்தில் பாராளுமன்ற படை [RSF] வீரர்கள் சுமார் 80 கிராமவாசிகளை கடந்த வியாழனன்று சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.

    முன்னதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களை RSF வீரர்கள் கடத்த முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமற்ற கிராம மக்கள் எதிர்த்து நின்ற நிலையில் அவர்களை நோக்கி RSF வீரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    அதிகாரம்

    கடந்த புதன் கிழமை அன்று ஸ்விடர்லாந்தில் அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சூடான் ராணுவம் மறுத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சூடான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மக்களை எந்தவித வாரண்ட்டும் இன்றி கைது செய்யலாம் என்ற அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டதும் கவனிக்கத்தக்கது.

     

    • போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
    • மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக பெண் ஒருவர் கூறுகிறார்.

    உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடான சூடானில் தினமும் பெண்கள் ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட வரிசையில் நிற்கின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே தங்களது குடும்பத்துக்கு தேவையான உணவும் அத்தியாவசிய பொருட்களும் அவர்களுக்கு கிடைக்கிறது .

    இதுகுறித்து கார்டியன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சத்தை சமாளிக்க  நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பதப்படுத்தப்பட்டு இருப்பு வைக்கபட்டுள்ள நிலையில் அங்கு தங்களின் குடும்பத்துக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்ள வரும் பெண்கள் ராணுவ வீரர்காளால் இந்த வன்கொடுமைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

    சூடான் ராணுவத்தின் இருவேறு பிரிவுகளான SAF மற்றும் RSF ஆகிய படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மோதல் உள்நாட்டுப் போராக வெடித்தது. இந்த போரில் இதுவரை சுமார் 150,000 மக்கள் இறந்துள்ளனர். போரில் ஏற்பட்ட பஞ்சத்தால் 11 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    RSF ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக அப்பெண்கள் பலர் கார்டியன் இதழ் கள செய்தியாளர் குழுவிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    தங்களின் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கு வேறு வழி தங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். போரினால் கைவிடப்பட்ட வீடுகளில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் பெண்களை வரிசையில் நிறுத்தி பாலியல் வன்புணர்வு செய்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், தான் அதற்கு மறுத்ததால் தன்னை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்து தனது கால்களை எரித்ததாக கூறுகிறார். கைவிடப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்று அதன்மூலம் உணவு வாங்க வேண்டும் என்றால் ராணுவ வீரர்களின் நிர்பந்தத்துக்கு அடிபணித்த பிறகே அனுமதி கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

    • டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே அதிகார போட்டி காரணமாக உள்நாட்டு போர் மூண்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசி, பட்டினியால் வாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


    இதற்கிடையில் மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் திடீர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர். வான்வழியாக சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.

    இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    • சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
    • மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

    சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,




    உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.




    மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.




    உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

    • சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்தது.
    • பொதுமக்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    கெய்ரோ:

    சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்தது. அன்று முதல் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.

    சூடான் தலைநகர் கார்ட்டமின் இரட்டை நகரமான ஓம்குர் மாரில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்கள் கையில் அந்தநாட்டு கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்,

    அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் ௬ பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    மேலும் கார்டுமீன் நைல் ஆற்றின் குறுக்கே ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். குழந்தை ஒன்றும் மார்பில் குண்டுபாய்ந்த நிலையில் இறந்து கிடந்தது. இதனால் இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

    உள்நாட்டு போரால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சூடான் சிக்கித்தவித்து வரும் நிலையில் அரசாங்கத்தை கலைத்து அதிபர் பஷிர் உத்தரவிட்டுள்ளார். #OmaralBashir
    கார்டோவும் :

    தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.

    உள்நாட்டு போர் காரணமாக சூடானில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் கட்டுப்பாடற்று அதிகரித்துள்ளது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால் வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கருப்பு சந்தை உருவானது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.

    இதனால் நிலைமை இன்னும் மோசமாகி கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் அரசாங்கம் தடுமாறியது. மானியங்களை அரசு தடை செய்ததால் ஜனவரி மாதம் முதல் ரொட்டிகளின் விலை இரண்டு மடங்கானது. இதன் காரணமாக மக்கள் அமைதி இழந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.

    மேலும், ஏறக்குறைய நாட்டில் உள்ள சரிபாதி ஜனத்தொகை போதுமான உணவின்றி தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அதிபர் ஓமர் அல் பஷிர் தலைமையில் இன்று அவசர அவசரமாக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் சூடான் அரசாங்கம் கலைக்கப்படுவதாக அதிபர் பஷிர் அறிவிப்பு வெளியிட்டார்.

    மந்திரிசபையின் எண்ணிக்கையையும் 31-ல் இருந்து 21 ஆக குறைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #OmaralBashir
    சூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Sudanboataccident
    கார்டவும் :

    சூடானில் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து 750 கிலோ மீட்டர் வடக்கே அமைந்த நைல் நதியில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். 

    இந்நிலையில், இயந்திர கோளாறு காரணமாக பாதி வழியில் பழுதாகி நின்ற படகு திடீரென தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணம் செய்த பள்ளி சிறுவர்களில் 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  இந்த விபத்தில் பெண் ஒருவரும் பலியாகி உள்ளார்.

    உயிரிழந்த சிறுவர்களின் சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. படகு கவிழ்ந்து சிறுவர்கள் 22 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Sudanboataccident
    ×