என் மலர்
நீங்கள் தேடியது "தப்பி ஓடிய குற்றவாளிகள்"
மகாராஷ்டிராவில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #AccusedEscaped #PoliceCustody
கோலாப்பூர்:
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் ஷாஹூவாடி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை மற்றும் வீட்டை உடைத்து திருடியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களை மே 20-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, 4 பேரையும் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் போலீசார் சற்று கண் அயர்ந்த வேளையில், காவல் நிலைய லாக்கப்பில் இருந்து 4 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். லாக்கப் கதவின் கிரில் கம்பிகளை வளைத்து அதன் வழியாக வெளியேறி உள்ளனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாவட்ட எல்லைகள் உடனடியாக மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது. #AccusedEscaped #PoliceCustody






