search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் உடல்"

    • கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர்.
    • இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அங்குள்ள மயான புறம்போக்கு இடத்தில் நேற்று மதியம் பள்ளம் தோண்டினார்கள். பள்ளம் தோண்டும் போது மனித உடலின் கை தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அங்கிருந்த அதிகாரியிடம் இது குறித்து கூறினர். அவர் சாலவனூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வஞ்சனூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் நேற்று மாலை 4 மணிக்கு வந்த போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் உதவியுடன் பள்ளத்தில் இருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். இதில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடலை கண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கொடுத்தார்.

    இந்நிலையில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சாலவனூர் கிராமத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செஞ்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கவினா கூறுகையில், இளம்பெண்ணை யாராவது கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். இதற்காக 25 முதல் 30 வயது வரையில் காணாமல் போன இளம்பெண்கள் குறித்த விபரங்களை மற்ற போலீஸ் நிலையங்களில் இருந்து பெறும் பணி நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்டாரா? பாலியல் துன்புறுத்தல் ஏதேனும் நடந்துள்ளதா? எப்போது இந்த சம்பவம் நடந்தது என்பன போன்ற விபரங்கள் தெரியவரும் என்று கூறினார். இந்த சம்பவத்தால் சால வனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பரபரப்பாக காணப்படுகிறது.

    • போடியில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் கட்டைப்பாலம் என்ற பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது.
    • கேரள போலீசாரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் கட்டைப்பாலம் என்ற பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து குரங்கனி போலீசாருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை அதேஇடத்தில் டாக்டர்களை வரவழைத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.

    மேலும் இறந்த பெண்ணின் உடல் உறுப்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இதனிடையே காணாமல் போன பெண்கள் பற்றிய விபரம் சேகரிக்கப்பட்டு வந்தது. இதனிடையே போடியை சேர்ந்த ஒருவாலிபர், கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இறந்த பெண் அவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரது செல்போன் எண்ணை டிரேஸ்அவுட் செய்ததில் கொச்சி விமானநிலையத்தில் அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த வாலிபர்கள் இளம்பெண்களுடன் சுற்றுலாவுக்கு வந்ததும், அவர்கள் மதுபோதையில் இதேஇடத்தில் ஆடிப்பாடியதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் அவர்கள் யார் என்ற கோணத்திலும் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் போடி டி.எஸ்.பி தலைமையில் ஒரு தனிப்படை, குற்றப்பிரிவு போலீசார் உள்பட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இறந்த பெண் யார், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தியும் எவ்வித தடயமும் சிக்கவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது இறந்த பெண் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். ஆனால் இதுகுறித்து கேரள போலீசாரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    ×