search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலினா ரைபகினா"

    • கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.
    • அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    அதேபோல மற்றொரு ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா, அமெரிக்காவின் எம்மா நவரோவை எதிர் கொண்டார். இதில் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி சபலெங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.
    • கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் 7-5 ,6-7 (6-8), 2-6 6-3, 6-0 என்ற செட் கணக்கில் இத்தாலியை சேர்ந்த 30-ம் நிலை வீரரான லாரன்சோ முசெட்டியை வீழ்த்தி 4-வது ரவுண்டுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் ( ஜெர்மனி), 5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா), கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் இருக்கும் ஷபலென்கா (பெலாரஸ்), நான்காம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா ( கஜகஸ்தான்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    7-வது வரிசையில் உள்ள சீனாவை சேர்ந்த கின்வென் ஜெங் 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த எலினா அவனேசியன் 3-6, 6-3, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    • மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார்.
    • அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த 'நம்பர் ஒன்' வீராங்கனையும், கடந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 25-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான எலினா ரைபகினாவுடன் (கஜகஸ்தான்) பலப்பரீட்சை நடத்தினார்.

    மணிக்கு அதிகபட்சமாக 190 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் போட்டு மிரட்டிய ரைபகினா முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் தொடக்கத்தில் 3-0 என்று முன்னிலை கண்ட ஸ்வியாடெக் அதன் பிறகு கோட்டை விட்டார். முடிவில் ரைபகினா 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 89 நிமிடங்களில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனில் முதல்முறையாக கால்இறுதியில் கால்பதித்தார்.

    இகா ஸ்வியாடெக்

    இகா ஸ்வியாடெக்

    தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள வீராங்கனையை ரைபகினா தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். 23 வயதான ரைபகினா கூறுகையில், 'நம்பர் ஒன் வீராங்கனைக்கு எதிராக விளையாடும் போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. அவர் பந்தை வேகமாக ஓடி திருப்பி அடிக்கக்கூடியர்.

    அவரது தற்காப்பு யுக்தியும் சிறப்பாக இருக்கும். அதனால் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியமாக இருந்தது. அதனால் தொடக்கம் முதலே அதிரடியாக மட்டையை சுழற்றினேன். இந்த முயற்சிக்கு உண்மையிலேயே பலன் கிடைத்தது' என்றார்.

    • விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை முதல் முறையாக தகுதி.
    • இறுதிப் போட்டியில் விளையாட கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை தகுதி பெற்றார்.

    லண்டன்:

    லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    முதல் அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதி சுற்றுக்கு எட்டுவது இதுவே முதல் முறையாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இதன் மூலம் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குக்குள் நுழைந்த முதல் கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். நாளை நடைபெறம்விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜபீரை, எலினா எதிர்கொள்ள உள்ளார்.

    ×