என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூடான் மோதல்"
- சூடானில் கடற்படை கப்பல் உதவியுடன் இந்தியர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
- வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி:
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூடானில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற பெயரிலான திட்டத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன. இதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அதன்பின், இந்தியாவின் கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சுமேதா உதவியுடன் அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இன்று மாலை புறப்பட்ட தனி விமானம் புதுடெல்லி வந்து சேர்ந்தது. இத்தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அதில், 'இந்தியா தனது சொந்தங்களை மீண்டும் வரவேற்கிறது. ஆபரேசன் காவேரி மூலம் 360 இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் முதல் விமானம் புதுடெல்லியை அடைந்தது' என தெரிவித்துள்ளார்.
- சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு ஜெட்டா வந்தடைந்தது.
- தொடர்ந்து அங்கிருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
புதுடெல்லி:
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3,000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
அந்த வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இந்தக் குழுவானது சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வந்தடைந்தது. சூடானில் உள்ள இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சூடானில் மீட்கப்பட்ட 121 இந்தியர்கள் கொண்ட இரண்டாவது குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் புறப்பட்டது.
- சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
- இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோதலில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவ படை இடையே தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு 72 மணி நேர போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் முயற்சிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.
அவ்வகையில் சூடானில் மீட்கப்பட்ட 278 இந்தியர்கள் கொண்ட முதல் குழு, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமேதா கப்பல் புறப்பட்டது. இந்தக் குழுவானது சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திற்கு வருகிறது. மேலும், சூடானில் உள்ள இந்தியர்களுக்கான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீட்பு பணிகளை கவனிப்பதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் ஜெட்டா சென்றுள்ளார்.
- வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.
- இந்திய குடிமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
புதுடெல்லி:
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளிடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். இந்தியர்கள் உள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடைபெறுகிறது. சூடானின் பல்வேறு பகுதிகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், சூடான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் தூதரக அதிகாரிகள், விமானப்படை தளபதி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சூடானில் உள்ள நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்தியர்களை துரிதமாக மீட்பது குறித்த மீட்பு திட்டங்களை தயாரிப்பது குறித்தும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
சூடானின் தற்போதைய சூழல் குறித்து பிரதமர் ஆய்வு செய்ததுடன், சூடான் முழுவதும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து மதிப்பீடு செய்து அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கூறினார். அங்கு இந்தியர் பலியானதற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள்.
- இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள்.
கர்த்தூம்:
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள்.
ஆனால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திணறுகிறார்கள். உம்துர்மன் நகரில் இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அங்கு 24 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்தத்தை மீறி இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை என்று உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- சூடானில் ஏற்பட்ட மோதல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
- இந்த மோதலில் 2,600 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்டோம்:
ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது.
தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக சமீபத்தில் துணை ராணுவ படை அறிவித்தது.
இதனால் கார்டோமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், இது நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 180 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், சூடானில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தலைநகர் கார்டோம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. 2,600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தகவலை சூடானின் சுகாதார அவசரகால இயக்கங்களுக்கான மையத்தின் அமைச்சகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- ராணுவம் மற்றும் துணை ராணுவ தலைவர்கள் இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக மோதல் ஏற்பட்டுள்ளது.
- ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான் மற்றும் துணை ராணுவ படையான விரைவு ஆதரவுப் படையின் தலைவர் ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கர்த்தூமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தை பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிடுகின்றன. பிற பகுதிகளிலும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை, குண்டு வீச்சில் ஈடுபட்டு வருவதால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்கிறது.
சூடான் முழுவதும் ஆங்காங்கே மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கும் நிலையில், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு 97 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கர்த்தூமில் உள்ள விதிகளில் இன்னும் ஏராளமான உடல்கள் மீட்கப்படாமல் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம். அதேசமயம் சண்டையில் ஈடுபடும் படைவீரர்கள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தததன் அடிப்படையில், புர்ஹானும் டகலோவும் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்வந்தனர். எனினும், துணை ராணுவம் எப்படி ஆயுதப் படைகளில் ஒருங்கிணைக்கப்படும்? ஒருங்கிணைத்தபின், மொத்த படைகளின் கட்டுப்பாடு யாரிடம் இருக்கும்? என்பது உட்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை. இதன் காரணமாகவும், இரண்டு தளபதிகளிடையே பிரச்சனை அதிகரித்ததாலும் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.
- போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
- ஏராளமானோர் உயிருக்குப் பயந்து காவல்நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.
கர்த்தூம்:
சூடானின் புளூ நைல் மாநிலம், அல் ரோசரீஸ் நகரில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலத்தகராறில் ஆரம்பித்த பிரச்சனை கடுமையான மோதலாக மாறி, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். துப்பாக்கி சூடு நடத்தியதுடன், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொது இடங்களில் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சற்று அமைதி திரும்பியது. எனினும், நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல்களில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 108 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மோதல் காரணமாக ஏராளமானோர் உயிருக்குப் பயந்து காவல்நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.
அல்-ரோசரீஸ் நகரில் தொடர்ந்து மோதல் நீடிப்பதால் கூடுதல் படைகள் வரவழைக்கப்படுகின்றன. கிசான் பிராந்தியம் மற்றும் புளூ நைல் மாநிலத்தில் நீண்ட காலமாக பதற்றம் நிலவுகிறது. 2019ல் ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் உமர் அல் பஷீருக்கு ஆதரவாக தெற்கு கொரில்லா போராளிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையானது, பாதுகாப்பு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நிலம், கால்நடைகள், தண்ணீர் மற்றும் மேய்ச்சல் தொடர்பான கொடூரமான மோதல்கள் வெடித்துள்ளதாகவும், பழங்குடியினரிடையே வன்முறை தீவிரமடைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்