search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லெஜண்ட் சரவணா"

    • வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
    • இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார்.

    தொழிலதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது லெஜண்ட் சரவணன் தான் நடிக்கும் படம் குறித்து கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள நாங்கள் அங்கு சென்று கொண்டிருக்கிறோம்.

    இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் படத்துக்கு இசையமைக்கிறார். மேலும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    தூத்துக்குடியைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும்.

    படம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு திரைக்கு வரும். படத்தின் தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தப் படம் ஆக்ஷன் - த்ரில்லர் கதையாக இருக்கும்" என்றார்.

    • இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'.
    • 'தி லெஜண்ட்' திரைப்படம் ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.


    தி லெஜண்ட்

    அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. மேலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் ஐந்து மொழிகளில் 2500- க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.


    தி லெஜண்ட்

    முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம் மற்றும் உலகமெங்கும் 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்துள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×