search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பள்ளி மாணவர்"

    • நாளை முதல் 9, 10, 11, 12 வகுப்புகள் ஆன் லைன் மூலம் நடத்தப்படும்.
    • ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடி பாடம் நடத்த ஏற்பாடு.

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

    முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக நாளை( புதன்கிழமை) முதல் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்கின்ற முடிவை எடுத்து இருக்கிறோம். அந்த வகையில் 9, 10, 11, 12 வகுப்புகள் மிக மிக முக்கியமான வகுப்புகள்.

    உடனடியாக Board Exam-க்கு அவர்கள் தயார் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு வாரம் ஆன்லைன் வகுப்பு முடித்த பிறகு, நேரடியாக பாடம் நடத்துவதற்கு தேவைப்படுகின்ற வகுப்பறைகளை தயார் செய்திட முடிவெடுத்திருக்கின்றோம்.

    கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடைய சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டது. மெட்ரிக் பொறுத்தவரை, எல்லா சான்றிதழ்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.

    இருந்தாலும், அந்தந்த மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் தனியாக ஒரு Special DEO போட்டிருக்கிறோம். இவர்களெல்லாம் அமர்ந்து, யார், யாருக்கெல்லாம் duplicate copy இல்லையோ, அவர்களையெல்லாம் வரவழைத்து, யார், யாருக்கெல்லாம் சான்றிதழ்கள் தேவைப்படுகின்றதோ, அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×