search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் மந்திரி"

    • அக்னிபாத் போராட்டகாரர்களை அவர் பயங்கரவாதிகள் என கூறியிருந்தார்.
    • முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிரான அவரது கருத்து தலைப்புச் செய்தியானது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ராம் சூரத் ராயின் சர்ச்சை பேச்சுக்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகின்றன.

    கடந்த மாதம், 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக அவர் தெரிவித்திருந்த கருத்துகள் அம்மாநில தலைப்புச் செய்திகளாக மாறின. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ரயில்களுக்கு தீ வைத்தவர்களை, அவர் பயங்கரவாதிகள் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் முசாப்பூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராம் சூரத் ராய், அங்கிருந்தவர்களை பார்த்து, பிரதமர் மோடியால்தான், நீங்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

    பாகிஸ்தானில் கொரோனா ஏற்படுத்திய பேரழிவை பாருங்கள் என்றும், மோடியின் தடுப்பூசி மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அவர் திறமையாக கையாண்டதன் மூலம் நாம் அனைவரும் காப்பாற்றப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×