என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காபி டீ"
- 'பட்டர் காபி' என்று அழைக்கப்படும் 'புல்லட் புரூப் காபி', அதிக கலோரிகள் கொண்ட பானமாகும்.
- பிரபலமாகப் பேசப்படும் 'புல்லட் புரூப் காபி' செய்முறை இதோ…
'பட்டர் காபி' என்று அழைக்கப்படும் 'புல்லட் புரூப் காபி', அதிக கலோரிகள் கொண்ட பானமாகும். இதில் கூடுதல் கொழுப்புச்சத்து சேர்க்கப்படுகிறது. இதனால் அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றல் எளிதாகக் கிடைக்கும். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும் எழுத்தாளருமான டேவ் ஆஸ்ப்ரே இந்த காபியை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.
கீட்டோ உணவு முறை மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை விரும்புபவர்களின் முதல் தேர்வு புல்லட் புரூப் காபி. இதில் முக்கிய மூலப் பொருளாக எம்.சி.டி (மீடியம் செயின் டிரைகிளிசரைடுகள்) எண்ணெய் எனப்படும் நடுத்தர சங்கிலி கொழுப்புத் தொடர்கள் கொண்ட எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதை தேங்காய் எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கின்றனர். இதில் 50 சதவீதம் மட்டுமே கொழுப்புச்சத்து இருக்கும். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகப் பேசப்படும் 'புல்லட் புரூப் காபி' செய்முறை இதோ…
தேவையான பொருட்கள்:
விருப்பமான இன்ஸ்டன்ட் காபித்தூள் - 1½ டீஸ்பூன்
சூடான தண்ணீர் - 1 கப்
எம்.டி.சி எண்ணெய் அல்லது விர்ஜின் தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
பசு நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
சூடான தண்ணீரில் காபித்தூளைக் கொட்டி 2 முதல் 3 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும்.
இந்தக் கலவையை மிக்சி அல்லது பிளெண்டர் மூலம் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.
விருப்பத்துக்கேற்ப இதில் பட்டைப்பொடி மற்றும் இந்துப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
இதை ஒரு கோப்பையில் ஊற்றி சூடாகப் பருகலாம்.
புல்லட் ப்ரூப் காபியை சர்க்கரை சேர்க்காமல் அருந்துவது நல்லது. இதில் இருந்து உங்களுக்குத் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் கனிம சத்துக்கள் கிடைக்கும்.
குறிப்பு: தண்ணீர் சூடாக இருப்பது அவசியம். அப்போதுதான் எண்ணெய் மற்றும் நெய் நன்றாக உருகி தண்ணீரில் கலக்கும்.
- காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கும்.
- பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 கப்
பால் - 1 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
காபி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
* தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.
* அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அல்லது மிக்சியில் போட்டு இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.
* காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.
* அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.
* பால் விரும்பாதவர்கள் பால் சேர்க்காமலும் செய்யலாம்.
- இந்த காபி பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
- சளி, இருமல் தொல்லை உள்ளவர்கள் இந்த காபியை அருந்தலாம்.
தேவையான பொருட்கள் :
மல்லி விதை (தனியா)- 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு, காபிதூள், சீரகம், ஓமம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
சுக்கு - ஒரு துண்டு,
கருப்பட்டி - தேவையான அளவு,
துளசி - கைப்பிடி.
செய்முறை :
துளசி, கருப்பட்டி, காபிதூள் தவிர மற்ற எல்லாவற்றையும் வெறும் கடாயில் இளம் சிவப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 5 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்த்து இறக்கவும்.
இறக்கி பிறகு, வடிகட்டிக் குடிக்கலாம். விருப்பப்பட்டால், பால் சேர்த்துக்கொள்ளலாம்.
பெரிய விருந்துக்குப் பின், சுக்குக் காபி அருந்தினால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்