search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்"

    • ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
    • 25 ஆண்டுகளுக்கு பிறகு சைமா சங்க தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

    திருப்பூர்:

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை உறுப்பினராக கொண்டு இயங்கி வருகிறது தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா). இந்த சங்கத்தின் 2022- 2025 க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். வைகிங் ஈஸ்வரன் அணி, பிரியா ஒசைரிஸ் பாலசந்தரை துணை தலைவராக நிறுத்தி மாற்றத்திற்கான அணி என இரண்டு அணியாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈஸ்வரன் போட்டியின்றி மீண்டும் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    பிற பதவிகளுக்கு மொத்தம் 52 பேர் போட்டியிட்டனர். திருப்பூர் ஹார்வி ரோட்டில் உள்ள சைமா சங்க வளாகத்தில் இன்று காலை 9மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மதியம் 2 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணை செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் பதவி என மொத்தம் 5 ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது. ஓட்டுச்சீட்டில் போட்டியாளர்கள் பெயர், போட்டோ, இடம் பெற்று இருந்தது. ஓட்டுச்சீட்டில் முத்திரை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். பேனாவால் டிக் செய்யக்கூடாது என தேர்தல் அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    காலை 9மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. உறுப்பினர்கள் ஆர்வமுடன் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். மதியம் 2 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததையடுத்து மாலை 3 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். நாளை நடைபெறும் மகா சபை கூட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்க உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு சைமா சங்க தேர்தல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×