என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாடகைத் தாய்"
- சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களே பெரும்பாலும் வாடகை தாய்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
- சூளைமேடு பகுதியில் மட்டும் பல வீடுகளில் வாடகை தாய்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு வாடகை தாய்கள் தொடர்பான விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் வீடுகளில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து கருமுட்டை தானமாக பெறுவதாகவும் புகார் எழுந்தது.
அங்குள்ள பெண்களிடம் இதுபற்றி விசாரித்த போது அவர்கள் சூளைமேடு பகுதியில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நோயாளிகள் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது பரபரப்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
சூளைமேடு பகுதியில் மட்டும் பல வீடுகளில் வாடகை தாய்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குஜராத், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் வங்காளதேசம், நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண்களே பெரும்பாலும் வாடகை தாய்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். அனைவரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதில் பலருக்கு திருமணமே ஆகவில்லை. குடும்ப வறுமையை பயன்படுத்தி இந்த செயலில் அவர்களை ஈடுபட வைத்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு உணவு கொடுக்காமலும் சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் பகலில் வெளியில் வர அனுமதிக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் மட்டுமே வெளியில் வர முடியும். மேலும் டாக்டர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.
இந்த விவகாரம் சூளைமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் விஸ்வநாதன், கிருஷ்ணா உள்பட 4 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. சுகாதாரத்துறையில் உள்ள ஊரக வளர்ச்சி பணிகள் திட்ட முகமையை சேர்ந்த இந்த குழுவினர் நேற்று சூளைமேட்டில் உள்ள சி.எப்.சி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.
- கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு.
- கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது.
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்