என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விசாரணை அறிக்கை"
- அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
- விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசுத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
சிலர் மீது துறை ரீதியிலான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் மீதான விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள கவர்னர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் அரசுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகளில் கவர்னருக்கு விரிவாக தெரிவித்திட அவசரமாக தகவல்கள் தேவைப்படுகிறது.
எனவே அத்தகையவர்கள் குறித்த முழு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் vigil@py.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் என்றால் எதனால்? விசாரணை அதிகாரி யார்? அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.
- Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 1½ வயது குழந்தை முகம்மது மகிருக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர்.
குழந்தையின் இந்த நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்த நர்சின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாய் அஜிஷா குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி, விசாரணை குழு நேற்று தனது விசாரணையை தொடங்கியது. ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 2-வது டவரில் உள்ள அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதலாவதாக குழந்தையின் தாய் அஜிஷாவிடம் விசாரணை நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை நடைபெற்றது. அவரிடம் வார்டில் நடந்தவைகள் குறித்தும், எப்போதில் இருந்து குழந்தைக்கு பிரச்சினை ஏற்பட்டது என்பது உள்ளிட்ட மொத்தம் 3 பக்கங்களில் 21 கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்விகள் அனைத்திற்கும் அஜிஷா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
இந்த நிலையில், விசாரணை குழுவின் அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே கால தாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
Venflon ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருந்து கசிவால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிற மாற்றம் ஏற்பட்ட பின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் Thrombophlebitis என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார். ரத்தநாள அடைப்பு செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை.
Pseudomonas கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால், குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றும் முயற்சியில் குழந்தையின் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.
- சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 8 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
- அறிக்கைகள் மீது காரசார விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை.
ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவையின் முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டசபை கூட்டத்தை 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்றும், நாளையும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
அதனை தொடர்ந்து, அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மீண்டும் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிக்கைகள் மீது காரசார விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தவிர, தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த அறிக்கையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். துணை நிதி நிலை அறிக்கையும் தாக்கலாகிறது. 2 நாட்களும் கேள்வி பதிலும் இடம் பெறும் என கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்