search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் அச்சம்"

    • கோமதி இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து பின்னால் சென்றுள்ளார்.
    • பெண்ணின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கரசானூர் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் இவரது மனைவி கோமதி (வயது 32) இவர் நேற்று இரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கோமதி இயற்கை உபாதைக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து பின்னால் சென்றுள்ளார். அப்போது கோமதி வீட்டின் பின்னால் சென்றபோது கதவின் பின்னால் ஒளிந்திருந்த மர்ம நபர் வீட்டினில் புகுந்தார். மீண்டும் கோமதி வீட்டிற்குள் வந்து தூங்கினார். அப்போது மர்ம நபர் கோமதியின் வாயை துணியால் அமுக்கி அவரது கழுத்தில் இருந்த 2 தங்கச் செயினை அறுத்துள்ளார். அப்போது 2 தங்கச் செயினும் பாதி மர்ம நபர் கையில் வந்த நிலையில் பின்புறமாக தப்பிச் சென்றார். இதனை அடுத்து கோமதி திருடன் திருடன் என்று கூச்சலிட்டார்.

    உடனே திடுகிட்டு எழுந்த வீட்டிலிருந்த வர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடினர் ஆனால் அவன் அங்கிருந்து தப்பிச் சென்றான். இது குறித்து கோமதி கணவர் வெற்றிவேல் வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இதேபோன்று நேற்று முளைச்சோர் பகுதியில் மூதாட்டி இடம் நூதன முறையில் நகை பறித்துச் சென்றனர். மீண்டும் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவம் தொடர்ந்து வானூர் பகுதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். இதற்கு போலீசார் வானூர் பகுதிகளில் ரோந்து உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுகின்றனர். 

    ×