என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் பட்டியல்"
- கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களின் பட்டியலை அடிப்படையாக்கொண்டு பிளஸ் - தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும்பணி துவங்கியுள்ளது.
- 28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
திருப்பூர் :
கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியலை அடிப்படையாக்கொண்டு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும்பணி துவங்கியுள்ளது.இது குறித்து திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும், அக்டோபர் 21 முதல் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று தங்கள் பள்ளியில் மார்ச் 2023ல் பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நிரந்தர பதிவு எண், பெயர், பிறந்த தேதி, பாடத்தொகுதி, பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இப்பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) போட்டோ மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை 10-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலுடன் இணைத்து வரும் 28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே 10-ம் வகுப்பு சான்றிதழில் உள்ளவாறு இல்லாமல் அரசிதழில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்ய முடியும்.மாணவர் பெயர், தலைப்பெழுத்து விடுபட்டிருப்பின் தமிழில் தவறாக இருப்பின் அதனை முழுமையாக நீக்கம் செய்து, மாற்றவும். ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதி பின் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறொரு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்தால் அவர் பெயர், தற்போது பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கு பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் நகல், மாற்றுச்சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே படித்த பாடத்தொகுப்பு, பயிற்றுமொழி மற்றும் மொழிப்பாடத்தில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. பிளஸ் 1 பொது தேர்வெழுதிய பள்ளி மாணவர் பெயரை பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கபடாத நிலையில் பிளஸ் 2 தேர்வு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. அதேபோல், பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது.மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்ட பின் நீக்கலாம். கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கு முன், பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றும், பெறாமலும் இடைநின்று தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் பெயரை 2023 பட்டியலில் சேர்க்க இயலாது.28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்