search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல பூஜை விழா"

    • பொதுமக்கள் திரண்டு வந்து அய்யப்பனை சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்ன வாளவாடியில் உள்ள அரசமரத்து விநாயகர் கோவில் வளாகத்தில் விநாயகர், அய்யப்பசாமி, பாலமுருகன், கருப்பண்ணசாமி, கடுத்தசாமி, ராகு, கேது மற்றும் மஞ்சமாதா உள்ளிட்ட சாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்குள்ள அய்யப்பசாமி கோவிலில் கடந்த 7 வருடங்களாக அய்யப்ப பக்தர்கள் சார்பில் மண்டல பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8- ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது.

    திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியுடன் முதல் நாள் விழா தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கணபதி ஹோமமும், விநாயகர் மற்றும் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள கடவுள்களுக்கு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இதையடுத்து மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் அய்யப்பசாமி திருவீதி உலா தொடங்கியது.சின்னவாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாக சிறப்பு அலங்காரத்தில் அய்யப்பசாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பொதுமக்கள் திரண்டு வந்து அய்யப்பனை சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.மண்டல பூஜையை யொட்டி கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • வருகிற 14-ந் தேதி காலை கணபதி ேஹாமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று ரத ஊர்வலம் அய்யப்பன் கோவிலை சென்றடைகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், ஆண்டு தோறும் மண்டல பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மண்டல பூஜை நாளை மறுநாள் 14-ந் தேதி துவங்குகிறது. அய்யப்ப சுவாமி ஆறாட்டு விழா 14-ந்தேதி துவங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி காலை கணபதி ேஹாமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மகா கணபதி ேஹாமம், நவகலச அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம், பறையெடுப்பு, மகா விஷ்ணு பூஜை, உற்சவ பலிபூஜை, பகவதி சேவை, தாய்பகை மேளம், பள்ளிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    வருகிற 19 -ந் தேதி காலை 8மணிக்கு அய்யப்ப சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு ஆறாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். காலை 11மணிக்கு, சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில், வீரராகவப்பெருமாள் கோவில் குளத்தில் அய்யப்ப சுவாமி ஆறாட்டு விழா நடக்கிறது.மாலை 6:30 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து அய்யப்பசுவாமி ரத ஊர்வலம் துவங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக சென்று ரத ஊர்வலம் அய்யப்பன் கோவிலை சென்றடைகிறது.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, 20ந் தேதி துவங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:30 மணிக்கு கோவிலில் அன்னதானம் நடைபெற உள்ளது. மேலும் 15-ந்தேதி முதல், 18-ந் தேதி வரை தினமும், 7 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×