என் மலர்
நீங்கள் தேடியது "ரவீனா தாண்டன்"
- இந்தி திரையுலகின் பிரபல நடிகை ரவீனா தாண்டன்.
- இவருக்கு சமீபத்தில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்தி திரையுலகின் பிரபல நடிகையான ரவீனா தாண்டன். தமிழில் அர்ஜூனுடன் 'சாது', கமலுடன் 'ஆளவந்தான்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரான கே.ஜி.எப் திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை ரவீனா தாண்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் பல கிளம்பின. பத்ம ஸ்ரீ விருது பெரும் அளவிற்கு ரவீனா என்ன செய்தார் என கமெண்டுகள் மூலம் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரவீனா தாண்டன் கூறியதாவது, என்னை விமர்சிப்பவர்கள் கிளாமரை மட்டுமே பார்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் எனது கடுமையான உழைப்பு அவர்களுக்கு தெரியவில்லை. நான் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவில்லை. பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்களில் கூட நடித்தேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததை சிலர் விமர்சித்தாலும், எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள்தான் அதிகம் என்று கூறினார்.
- பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
- குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து மீண்டும் ரவீனா சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தி திரைத்துறையில் சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரவீனா தாண்டன். சின்னத்திரை தொடர்கள், நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள, ரவீனா கடந்த 22-ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு நடிகை ரவீனா வனத்துறை வாகனத்தில் சென்றார். அப்போது, வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்துள்ளார். அவருடன் சென்றவர்களும் புலியை புகைப்படம், வீடியோ எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை ரவீனா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.

சுற்றுலா பயணிகளுக்கான பாதையில் இருந்து மாறி சென்று பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ள இடத்திற்கு நடிகை ரவீனா சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், புலிக்கு மிகவும் அருகில் சென்று அதற்கு இடையூறு அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நடிகை ரவீனா பயணித்த வனத்துறைக்கு சொந்தமான வாகன டிரைவர், அவருடன் பயணித்த வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் தான் பயணித்தது வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஜீப்பில் தான் என்றும் சுற்றுலா வழிதடத்தை விட்டு மாறி வேறு இடத்திற்கு எங்கும் செல்லவில்லை என்றும் ரவீனா விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை ரவீனா மீண்டும் தனது சமூக வலைத்தளத்தில், "போருக்குத் தயார்" எனக் குறிப்பிட்டு வனப்பகுதியில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பலரும் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.