என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உயிர் தமிழுக்கு"
- நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.
- இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது.
நடிகர் ரஞ்சித், குழந்தை கேர் ஆஃப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரவீன் காந்தி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் வளர்ச்சியால் தமிழ் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது. சினிமாவில் சாதியைப் பற்றி பேசுபவர்களை ஒதுக்க வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில், இயக்குநர் அமீர் நடிப்பில் வெளியாகியுள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் நெல்லை பாளையங்கோட்டையில் இன்று திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக இயக்குநர் வெற்றிமாறன் அங்கு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றிமாறன், "இந்தியாவில் சாதிய ஏற்றத்தாழ்வு சமூக பாகுபாடு இல்லை என்று சொல்பவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியா முழுக்க சாதிய பாகுபாடுகள் உள்ளது. தமிழகத்திலும் இருக்கிறது. அதற்கு பல்வேறு சம்பவங்கள் உதாரணமாக நம் கண்முன்னே இருக்கிறது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், விடுதலை இரண்டு படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் நடந்து வருகிறது. 20 முதல் 25 நாட்களுக்கு படப்பிடிப்புக்கான வேலைகள் உள்ளது. அது முடிந்தவுடன் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். விடுதலை திரைப்பட பணிகள் நிறைவு பெற்றவுடன் வாடிவாசல் திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் ஏன்னு தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர்.
- வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.
2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர். அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம் திரைப்படத்தை இயக்கினார்.
மேலும் 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அமீருக்கு மிகப் பெரிய பேரும் புகழையும் சம்பாதித்து கொடுத்தது. அதைதொடர்ந்து சிலப் படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார்.
2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.
நேற்று வெளியான உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படத்திற்கான கொடுத்த நேர்காணலில் வாடிவாசல் திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் வெற்றிமாறன் தவிர்க்க முடியாதவர். அவர் அடுத்ததாக விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் அமீர் கூறியதாவது " படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும். படம் திட்டமிட்ட படியே நடக்கும் எனவும், வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 வேலைகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் , முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
- மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் படங்கள் வெளிவந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனால் ரீரிலீஸ் திரைப்படங்களுக்கு மக்கள் அதிகம் செல்லத் தொடங்கினர். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதைத் தொடர்ந்து இன்று 4 படங்கள் திரைக்கு வந்துள்ளது.
1.ஸ்டார்
இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்து பின்னணியை வைத்துக் கொண்டு திரைத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என போராடும் இளைஞனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
2. ரசவாதி
மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசவாதி திரைப்படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
3. உயிர் தமிழுக்கு
தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் அமீர், அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும் மற்றும் முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடித்தார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ஆதாம் பாவா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பொலிடிகல் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
4. மாயவன் வேட்டை
அறிமுக இயக்குனரான சிக்கல் ராஜேஷ் அவரே இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் மாயவன் வேட்டை. மூவிலயா பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். சிக்கல் ராஜேஷ் மற்றும் திவ்ய பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மாயவன் வேட்டை ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்.
- மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்வது நீங்க தான்.
இயக்குநர் அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் "உயிர் தமிழுக்கு" திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வு குறித்து காட்டமான கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது. நீட் தேர்வில் முறைகேடு செய்து சமீபத்தில் கூட 50-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் சிக்கினர். அப்போ நீங்கள் போலி மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? தரமான மருத்துவர்களை உருவாக்குகின்றீர்களா? இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும்,, இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா?"
"வடமாநிலத்தில் எந்த பெண்ணும் தோடு, மூக்குத்தியை கழற்ற வைக்கப்படவில்லை. என் மாநிலத்தில் மட்டுமே தோடு, மூக்குத்தி என எல்லாவற்றையும் கழற்ற வைக்கின்றீர்கள். மூக்குத்தியில் பிட் வைக்க முடியும் என்று சொல்லும் நீங்கள் தான் இ.வி.எம். இயந்திரத்தை எதுவும் செய்ய முடியாது என சொல்கின்றீர்கள்," என்று தெரிவித்தார்.
- ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னை பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
- என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்
இயக்குநர் அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அரசியல் நையாண்டிப் படமான இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் பேசிய அமீர், "ஜாபர் சாதிக்கை எனக்கு தெரியும், அவருடன் பழகியிருக்கிறேன். ஆனால், அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவர் தொழில்கள் என்னென்ன, அவருக்கு எப்படி பணம் வருகிறது என்றெல்லாம் நான் ஒரு நாளும் கேட்டதில்லை. நம்முடன் நிறைய பேர் பழகுவார்கள் அவரின் பின்னணியெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது.
'லைகா' நிறுவனம் மீது பல வழக்குகள் இருக்கிறது. 'லைகா' தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கிறார். என்றாவது ரஜினியிடம், லைகா நிறுவனத்தின் வழக்குகள் குறித்து யாரும் கேட்டிருக்கிறீர்களா. ஆனால், ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னைப் பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது.
இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார். நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விளக்கமளித்த பின்பும் என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படுகிறது. என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள்.
இந்த அவதூறுகள் எல்லாம் என்னை பாதிப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பாதிக்கிறது. அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.
அமலாக்கத்துறை என்னை விசாரித்தது, நானும் முழு ஆதரவுக் கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் எனக்கு எந்தப் பயமுமில்லை. என் மீது சந்தேகப்படுவது, கேள்வி கேட்பதையெல்லாம் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால் அவதூறு பரப்புவது சரியானதல்ல. சிலர் அதைத் திட்டமிட்டுச் செய்கின்றனர்" என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
- இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'
- இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'.
- இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.
- தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'.
- இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
வித்தியாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'உயிர் தமிழுக்கு' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை இந்த மாத இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு வெளியிடும் விதமாக படக்குழுவினர் ரிலீஸ் சம்பந்தப்பட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் மட்டுமல்ல, செண்டிமெண்டாகவும் இந்தப்படத்தை பக்ரீத் பண்டிகை தினத்தில் வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதம் பாவா கூறியுள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான அமீர் தற்போது நடித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.
- இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், நடிகருமான அமீர் தற்போது நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். சிம்புவின் மாநாடு படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.
இதில் கதாநாயகியாக சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதில் இயக்குநரும் நடிகருமான அமீர் பேசும்போது, "தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படம் மூலம் அடி எடுத்து வைத்து இருபது வருஷம் ஆகிவிட்டது. திரையுலகில் 20 ஆண்டுகள் இருப்பதே ஒரு சாதனை தான். எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பயந்து பயந்து பேசியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது துணிச்சலாக பேசுங்கள் என்று கூறியபோது, நான் பேசிய விஷயங்களால் அந்த படத்தின் நாயகன் சூர்யா என் மீது கோபப்பட்டு கொஞ்ச நாள் எனிடம் பேசாமல் இருந்தார்.
நான் கரை வேட்டி கட்டிய அரசியலை படமாக இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில்தான் இந்த கதை என்னிடம் வந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் கதைக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அதேசமயம் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.
ஆனந்த்ராஜ வில்லனாக நடித்து பார்ப்பதைவிட அவரை நகைச்சுவை நடிகராக ரசிப்பதற்கு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தை பார்ப்பவர்கள் என் மீதுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு படமாக மட்டும் பாருங்கள். இந்த படம் மொழியை பற்றி பேசும் படமே தவிர மொழிப்பிரச்சினையை பற்றியது அல்ல. சமீப காலமாக இந்தி திணிப்பு, வட மாநில மக்களின் வருகை என தமிழ் மொழிக்கு எதிரான அநீதிகள் நடப்பதால் இந்த தலைப்பு தற்போது அவசியமாகிறது. நேரடி அரசியலுக்கு வரும் தகுதியை நான் இன்னும் வளர்த்து கொள்ளவில்லை.
உதயநிதி அமைச்சர் ஆகிறார் என்றால் அதனால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றால் இல்லை. பான் இந்தியா என்கிற கலாச்சாரம் இப்போது வருவதற்கு முன்பே மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய் ஆகிய படங்கள் அதை சாதித்து காட்டிவிட்டன. இந்தியில் இருந்தும் ஷோலே, ஹம் ஆப் கே போன்ற படங்கள் எல்லாம் இங்கே ஒரு வருடம் ஓடின. கிழக்கு சீமையிலே, ஆட்டோகிராப், பருத்திவீரன், சுப்பிரமணியபுரம் படங்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ற படம். அதனால் பான் இந்தியாவுக்கு என ஒரு படம் எடுப்போம் என்பதே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்" என்று கூறினார்
- ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’.
- இந்த படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
உயிர் தமிழுக்கு ஃபர்ஸ்ட்லுக்
வித்தியாசாகர் இசையமைக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்