search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் பறிப்பு"

    • மொரட்டாண்டி குப்பம் டோல்கேட் அருகில் லாரி வந்தபோது சாலை ஓரமாக 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.
    • பிடிபட்ட வாலிபரை வானூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 48) லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் லாரியில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றுள்ளார். அப்போது மொரட்டாண்டி குப்பம் டோல்கேட் அருகில் லாரி வந்தபோது சாலை ஓரமாக 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் காசிநாதன் ஒட்டி வந்த லாரியை நிறுத்தி லிப்ட் கேட்பது போல் ஏறினர். சிறிது தூரம் லாரி சென்றவுடன் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி காசிநாதனிடம் இருந்து ரூ. 700 மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றனர். அப்போது காசிநாதன் வேலை பார்த்து வரும் கம்பெனியை சேர்ந்த லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் கம்பெனி லாரி நின்று கொண்டிருப்பதை பார்த்து உடனே லாரியை நிறுத்தி அங்கு சென்று பார்த்தார். அப்போது கத்தியை காட்டி காசிநாதனிடம் பணம் செல்போனை திருடி சென்ற நபர்களில் ஒருவனை அவர்கள் மடக்கி பிடித்தனர்.

    இதனை தொடர்ந்து பிடிபட்ட வாலிபரை வானூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை செய்ததில் புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பதும் தப்பி ஓடிய வாலிபர் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ராஜகுமரன் (40) என தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் என்பதும் ஒன்றாக சேர்ந்து இரவு நேரங்களில் வரும் லாரியில் லிப்ட் கேட்பது போல் ஏறி அவர்களிடமிருந்து பணம் பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது குறித்து இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார் தமிழரசனை கைது செய்தனர். தப்பியோடிய ராஜகுமரனை வலைவீசி தேடி வருகின்றனர். லிப்ட் கேட்டு லாரி வாகனங்களில் ஏறி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பது வாகன ஓட்டிகளிடையே வேதனை அளிக்கிறது.

    ×