என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடல் ஆமைகள்"
- இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
- கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரி:
பசிப்பிக் கடல் பகுதியில் வாழும் ஆலிவ்ரெட்லி மற்றும் சில வகை ஆமைகள், முட்டையிடுவதற்கு இந்திய பெருங்கடல் கரை பகுதியில் வரும். அவ்வாறு காரைக்கால் கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்பு மணல் பரப்பில் முட்டையிட வந்தபோது, படகில் மோதியோ, வலையில் சிக்கியோ இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தது. கடந்த சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி மற்றும் பிற வகை ஆமைகள், காரைக்கால் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கி கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் அமைப்பினர், உடனடியாக கடற்கரைக்கு சென்று, இறந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளை கண்டறிந்து, கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.