என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Robber’s Arms"
- உலக அமைதி வேண்டி பிரகதீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
- 108 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வீடூர் பகுதியில் பிரகன் நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு உள்ள சன்னதி யில் தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பின் விழுப்புரம் மாவட்ட தலைவர் பாபு ஆலோசனைப்படி உலக அமைதி வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கு தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்ட மைப்பின் விழுப்புரம் மாவட்ட துணை தலைவர் அம்மன் கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செந்தில், செந்தில் குமார், மணி கண்டன், கருணாநிதி, சங்கர், பாபு,ஆனந்தகுமார், தயானந்தம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
- கவனத்தை திசை திருப்பி வியாபாரியிடம் நகை அபேஸ் செய்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
- கடந்த 3 நாட்களாக அந்தப் பகுதிக்கு வந்த ஒருவர் அவரிடம் தான் பெரிய பைனான்ஸ் அதிபர் என ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ந்து பேசி வந்தனர்.
விழுப்புரம்
திண்டிவனம் இந்திரா நகரில் வசித்து வருபவர் கதிரேசன் (வயது72). இவர் திண்டிவனம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார்.
கடந்த 3 நாட்களாக அந்தப் பகுதிக்கு வந்த ஒருவர் அவரிடம் தான் பெரிய பைனான்ஸ் அதிபர் என ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ந்து பேசி வந்தனர். மறுநாள் அங்கு வந்த அந்த மர்ம நபர் கதிரேசனிடம் வழக்கம் போல் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது கதிரேசன் அணிந்திருக்கும் மோதிரம் அழகாய் இருப்பதாகவும், பார்த்துவிட்டு தருவதாகவும் கூறி கேட்டுள்ளார்.
இதனை நம்பி கதிரேசன் தனது கையில் இருந்த மோதிரத்தை கழற்றி கொடுத்துவிட்டு வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அந்த மர்ம நபர் அங்கிருந்து மறைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த கதிரேசன் அந்த நபரை தேடி உள்ளார்
எங்கும் கிடைக்காத நிலையில் திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர் குறித்த தகவல்களை சேகரித்து. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை திண்டிவனம் உட்கோட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு உதவி யாளர் ஆய்வாளர் அய்யப்பன், காவலர்கள் தீபன் குமார், செந்தில் கோபால கிருஷ்ணன், ஆகி யோர் கொண்ட தனிப்படை யினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது கள்ளக்குறிச்சி அருகே விளந்தை கிராமத்தில் பதுங்கி இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது பெயர் முருகன்.இவர் திண்டிவனத்தை சேர்ந்த கதிரேசனிடம் மோதிரத்தை திருடியதை ஒப்புகொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான கதிரேசன் மீது பல்வேறு திருடடு வழக்குகள் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்