என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணிஷ் சிசோடியா"
- டெல்லி துணை முதல்வராக இருந்து மணிஷ் சிசோடியோ ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
- கட்சியில் இருந்து வெளியேறும்படி பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் ஜாமின் பெற்று விடுதலை ஆனார்.
தற்போது கெஜ்ரிவாலும் ஜாமின் பெற்ற நிலையில், மக்கள் தங்களை தூய்மையானவர்கள் என்று அழைக்கும்வரை நானும், மணிஷ் சிசோடியாகவும் பதவி ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்ததோடு முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் மக்கள் நீதிமன்றத்தில் தங்களை குற்றமற்றவர்கள என நிரூபிக்க பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்கள்.
மணிஷ் சிசோடியா பேசும்போது, தனது மகன் கல்வி கட்டண உதவிக்காக பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மணிஷ் சிசோடியா கூறியதாவது:-
2002-ல் நான் பத்திரிகையாளராக இருந்தபோது, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பிளாட் வாங்கினேன். அது என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. எனது அக்கவுண்டில் 10 லட்சம் ரூபாய் இருந்தது. அதுவும் எடுக்கப்பட்டது. என்னுடைய மகன் கல்விக்கட்டணம் உதவிக்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தேன். ஆனால் அமலாக்கத்துறை என் அக்கவுண்ட்-ஐ முடக்கியது.
பா.ஜ.க.-வுக்கு மாறும்படி என்னிடம் வற்புறுத்தப்பட்டது. அவர்கள் என்னை ஜெயலில் கொன்றுவிடுவார்கள் எனக் கூறினார்கள். என்னைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும், அரசியலில் யாரும் யாரைப் பற்றியும் நினைப்பதில்லை என்றும் கூறினார்.
என் குடும்பம், என் நோய்வாய்ப்பட்ட மனைவி, கல்லூரியில் படிக்கும் என் மகன் பற்றி யோசிக்கச் சொன்னார்கள். அப்போது நான் ராமரிடம் இருந்து லட்சுமணனை தனியாக பிரிக்க முயற்சி செய்கிறீர்கள். உலகில் எந்த ராவணனுக்கும் எந்த அதிகாரம் கிடையாது. 26 வருடங்களாக அரவிந்த் கெஜ்ரிவால் என்னுடைய சகோதரர் மற்றும் அரசியல் ஆலோசகர். அவர்கள் எங்களை கட்சியில் இருந்து பிரிக்கவே, கட்சியை உடைக்கவோ முடியவில்லை.
இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.
- மக்கள் தீர்ப்பு அளிக்கும்வரை நானும், சிசோடியாவில் பதவி வகிக்கமாட்டோம்- கெஜ்ரிவால்.
- டெல்லியின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
நேற்று திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தெரிவித்தார். இதனால் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா முதல்வராகலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், மக்கள் நேர்மையானவர் என்ற சொன்ன பிறகே நானும் சிசோடியாவும் பதவிக்கு திரும்புவதாக கெஜ்ரிவால் தெரிவித்துவிட்டார்.
இதனால் மணிஷ் சிசோடியா முதல்வராக வாய்ப்பில்லை.
அதிஷி
அடுத்தது அதிஷி. இவர்தான் முன்னணி தலைவராக உள்ளார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது நிர்வாகத்தை நடத்தியது இவர்தான். இவர் கைவசம் 14 துறைகள் உள்ளன. கல்வி, நிதி, திட்டம், மக்கள் தொடர்பு, பொதுப்பணித்துறை போன்ற இலாகாக்களை கையில் வைத்துள்ளார்.
கல்விக்கான டெல்லி சட்டமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் உள்ளது. அவரது வலுவான பேச்சுத்திறன் அவரை முதல்வர் பதவிக்கு முன்னணியில் உள்ளவர்களில் ஒருவராக்கியுள்ளது.
கோபால் ராய்
கோபால் ராய். 49 வயதான இவரின் மக்கள் பணி மற்றும் அனுபவம் ஆகியவை முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிறுத்துகிறது. மாணவர் செயல்பாட்டின் பின்னணியைக் கொண்ட ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி ஆவார். மேலும் டெல்லியின் அரசியலில் நீண்ட காலமாக முக்கியப் பங்காற்றி வருகிறார்.
கோபால் ராய் டெல்லியின் தொழிலாள வர்க்க சமூகங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என அறியப்படுபவர். தொழிலாளர் உரிமைகள் தொடர்பான பின்னணி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான அவரது முயற்சிகள் ஆகியவை வாக்காளர்களிடம் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தொழிலாளர் நலன் மற்றும் மாசு கட்டுப்படுத்துதல் போன்ற பணிகள் அவரை முதல்வர் பதவிக்கு முன்னுறுத்துகிறது.
கைலாஷ் கெலாட்
கைலாஷ் கெலாட். டெல்லி அரசியல் வட்டாரத்தில் நன்றாக அறியப்படக் கூடியவர். தற்போது போக்குவரத்துத்துறை மந்திரியாக உள்ளார். இவரது தலைமையின் கீழ் டெல்லி அரசு, அம்மாநில போக்குவரத்துத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தது.
மின்சார பேருந்து, சாலை போக்குவரத்தை உறுதி செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. இதனால் இவரும் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார்.
- மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் கைது செய்தது.
- சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ஐ சுட்டிக்காட்டி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை டெல்லி மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை அழிப்பதில் சிசோடியா ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக தெரிவித்த நீதிபதி ஸ்வரன காந்தா ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.
மேலும், டெல்லி அரசின் அதிகாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார். ஏனெனில் அவர் 18 இலாகாக்களின் பொறுப்பில் இருந்தார் என நீதிபதி தெரிவித்தார்.
ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமின் வழங்க மணிஷ் சிசோடியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம் "விசாரணை நீதிமன்றம் நிபந்தனைகள் அடிப்படையில் உடல்நலம் சரியில்லாத மனைவியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது தொடரும்" எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே விசாரணை நீதிமன்றம் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மதுபானக் கொள்கை தொடர்பான மோசடி வழக்கில் கைது செய்தது. சிபிஐ-யின் எஃப்ஐஆர்-ஐ சுட்டிக்காட்டி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
சிபிஐ கைது செய்த நிலையில் மணிஷ் சிசோடியா துணை முதல்வர் பதவியை பிப்ரவரி 28-ந்தேதி கைது செய்தார்.
- மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
- பிப்ரவரி 28-ந்தேதி தனது டெல்லி மாநில துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், டெல்லி மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியோ மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமின் கிடைக்காமல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் சிசோடியா, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு வருகிற 20-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை மற்றும் சிபிஐக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 20-ந்தேதி மணிஷ் சிசோடியாவின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா விசாரணைக்கு ஏற்றுக் கொள்வார் எனத் தெரிகிறது.
மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சிபிஐ எஃப்.ஐ.ஆர்.யை மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரை மார்ச் 9-ந்தேதி கைது செய்தது.
துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- திகார் சிறையில் இருக்கும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஜாமீன் மறுத்து இருந்தது.
- இதை தொடர்ந்து மணிஷ் சிசோடியா இன்று காலை 10 மணியளவில் திகார் சிறையில் இருந்து புறப்பட்டார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ந் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் இருக்கும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் ஜாமீன் மறுத்து இருந்தது.
இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை சந்திக்க சிசோடியா டெல்லி கோர்ட்டில் அனுமதி கேட்டார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 6 மணி நேரம் சந்திக்க அவருக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து மணிஷ் சிசோடியா இன்று காலை 10 மணியளவில் திகார் சிறையில் இருந்து புறப்பட்டார். வீட்டுக்கு சென்று அவர் மனைவியை சந்தித்தார்.
- மதுபான முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது
- 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் கேட்டு சிசோடியா மனு தாக்கல்
டெல்லி மாநில மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. இவரை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்தது. அமலாக்கத்துறையும் அவரை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தில் அவரை பார்கக் அனுமதி கேட்டு இன்று ஒருநாள் மட்டும் பிணை பெற்றார். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.
இதனால் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணிஷ் சிசோடியா அவரது வீட்டிற்கு சென்று உடல்நிலை சரியில்லாத மனைவியை பார்க்க விரைந்தார். அதற்குள் அவரது மனைவி உடல்நிலம் மிகவும் மோசமடைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இதனால் வீட்டிற்கு வந்தடைந்த மணிஷ் சிசோடியோவால் தனது மனைவியை பார்க்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
இதற்கிடையே 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், மருத்துவமனை அவரது மனைவி உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளில் 60 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
- இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் படித்த பிரதமர் தேவை.
புதுடெல்லி:
டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில், முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திஹார் சிறையில் இருந்தபடி மணிஷ் சிசோடியா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் மணிஷ் சிசோடியா கூறியிருப்பதாவது:- குறைந்த கல்வித்தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து. எந்த ஒரு சமுதாயத்திற்கும் கல்வியே அடித்தளம். சமுதாயத்தில் கல்வியை வலுப்படுத்த வேண்டும். ஆனால் மாறாக கடந்த சில ஆண்டுகளில் 60 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன . பிரதமரின் கல்வியறிவு குறைவாக இருந்தால், அது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் படித்த பிரதமர் தேவை" என்று தெரிவித்துள்ளார்.
- டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
- சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் பாதுகாப்பு.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது.
தொடர்ந்து, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ காவலில் உள்ள மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அனைத்து மீட்டெடுப்புகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதால், அவரை காவலில் வைத்திருப்பது எந்தப் பலனையும் அளிக்காது என்று மணிஷ் சிசோடியா தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மணீஷ் சிசோடியா இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
மணீஷ் சிசோடியாவின் 5 நாள் காவலின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதையடுத்து, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் விசாரணை.
- பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
இருவரது ராஜினாமா கடிதங்களையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின் கைது செய்தனர்.
ஏற்கனவே, பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பதிவியில் இருந்த சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இருவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிலையில், தங்களது ராஜினாமாவை அறிவித்துள்ளனர்.
- எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி அரசு உளவு பார்ப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் அனுமதி.
- சிபிஐ அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கருத்துப் பிரிவு மோசடி வழக்கில் சிசோடியா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், மத்திய உள்துறை மந்திரி அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே டெல்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிசோடியா வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஐ, அவரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி இரண்டு முறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகளை ஆம் ஆத்மி அரசு உளவு பார்ப்பதாக பாஜக குற்றம் சாட்டிய நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்