search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேபிடோ பைக்"

    • கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
    • அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னையில் மொபைல் செயலி மூலம் உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி உள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையத்திற்கும் இந்த வசதியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். இந்த செயலி மூலம் தற்போது ரேபிடோ பைக் வசதியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இருசக்கர வாகனத்தில் தாங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்லும் இந்த வசதி பிரபலம் ஆகி வருகிறது. சென்னையில் எந்த பகுதியில் இருந்தும் தனிநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அழைத்துச் செல்வார்.

    இதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ, காரை விட இதற்கு கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் 'ரேபிடோ பைக்' வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதிகாலை முதல் இரவு வரை இந்த வசதி கிடைக்கிறது.

    சமீபத்தில் ரேபிடோ வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனமும் ரெயில் நிலைய பெண் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியது. பெண் பயணிகளை மோட்டார் சைக்கிளில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இவர்கள் அழைத்து செல்கின்றனர். ரேபிடோ பைக் வசதி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆட்டோ மற்றும் வாடகை கார் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரேபிடோ பைக் வசதியை சென்னையில் தடை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மொபைல் செயலிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் இணைக்கப்பட்டு சவாரி ஏற்றப்படுகிறது. இது மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமானது.

    பயணிகளுக்கு பாதுகாப்பற்றது. மெட்ரோ ரெயில் நிர்வாகம் இதனை ஏற்றுக் கொண்டு பெண்களை பயன்படுத்தி வருவது தவறான முன் உதாரணமாகும். ஆதலால் இதனை தடை செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம், கமிஷனரிடம் வலியுறுத்தினார்.

    இதையடுத்து போக்குவரத்து கமிஷனர் நாளை தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையில் 5 நாட்களுக்குள் 'ரேபிடோ' பைக் வசதியை முழுமையாக தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    ×