search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளிமலை முருகன் கோவில்"

    • வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 2-ந்தேதி குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    தக்கலைக்கு அருகே உள்ள குமாரகோவிலில் பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. குமரபருவத்தில் வேளிமலைக்கு வந்த முருகபெருமான் வள்ளிதேவியை காதலித்து திருமணம் செய்ததாக ஐதீகம். எனவே, இந்த கோவிலில் குடிகொண்டுள்ள முருகபெருமான் குமாரசாமி என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு தீபாராதனையும், அதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு தந்திரி அத்தியறமடம் நாராயணரு ராமரு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 9.40 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகனகுமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், கோவில் திருவிழா கமிட்டி காப்பாளர் பிரசாத், தலைவர் சுனில்குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் ஸ்ரீபூதபலி, கலசபூஜை, கலச அபிஷேகம், காலை மற்றும் இரவில் சாமியும், தேவியும் பூப்பல்லக்கு, மயில், கிளி ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் வருகிற 31-ந்தேதி இரவு 9 மணிக்கு சாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ம் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமியும், தேவியும் ஒரு தேரிலும், கணபதி மற்றொரு தேரிலும் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாளான 2-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.

    ×