என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தருமபுரி கொள்ளை"
- நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள எல்.ஆர்.மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சிவராம கிருஷ்ணன். இவர் ஓய்வுபெற்ற விலங்கியல் நிபுணர் ஆவார். இவரது மனைவி சாய் சரோஜா. இவர் அரசு பள்ளியில் உதவி உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சிவராமகிருஷ்ணன் தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் அவர்கள் கர்நாடாக மாநிலம் மைசூருவில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் அவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இன்று திறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்த போது, சிவராமகிருஷ்ணன் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல் நேற்று இரவு அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பவுன் தங்க நகைகளை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இதேபோல் சிவராமகிருஷ்ணன் வீட்டின் அருகில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியரான சிவக்குமார் என்பவரது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சிவக்குமார் திருமணம் நிகழ்ச்சிக்காக மைசூருக்கு சென்று உள்ளதாலும், அவரது வீட்டில் இருந்து தங்க நகைகளை சிவக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றதாலும், கொள்ளையர்களுக்கு எதுவும் கிடைக்காததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.
மேலும், சிவக்குமார் மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் நகை தவிர பணம் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்து சிவராமகிருஷ்ணனும், சிவக்குமார் ஆகியோர் மைசூரில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி நகர் பகுதியில் 2 வீடுகளில் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே முத்துகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி சிந்து (வயது25). இந்த நிலையில் நேற்று முன்தினம் சிந்து தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த செயின், தோடு உள்பட 6¾ பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெளிபுறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவில் உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
- ராஜா கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 47). விவசாயியான இவர் நேற்று வீட்டில் ஒரு அறையில் இரவு தூங்கி கொண்டிருந்தார். விடிந்தவுடன் எழுந்து பார்த்தபோது அறையின் கதவு பின்புறம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை திறக்க முடியாமல் அவதிப்பட்ட அவர் சத்தம்போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜாவின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும் அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. உடனே அவர்கள் ராஜா இருந்த கதவை திறந்து விட்டனர். ராஜா வெளியே வந்து பார்த்தபோது அவர் தூங்க சென்றபிறகு அவரது வீட்டின் கதவை மர்மநபர் உடைத்து உள்ளே புகுந்து, ராஜா தூங்கி கொண்டிருந்த அறையையும் வெளிபுறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவில் உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து ராஜா கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து ராஜாவின் வீட்டை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்