என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாட்டரி குலுக்கல்"
- குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
- பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார்.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்தவர் லவ்லி மோள் அச்சம்மா. இவர் வளைகுடா நாடான அபுதாபியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருந்தார். இதன் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.45 கோடி நர்சு லவ்லி மோள் அச்சம்மாவுக்கு கிடைத்தது. இதனை அறிந்த அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். பரிசு கிடைத்தது பற்றி அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மாதமும் எனது கணவர் தான் லாட்டரி சீட்டு வாங்குவார். இம்முறை நான் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தேன். அதற்கு முதல் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தில் எனது மைத்துனருக்கும் பங்கு கொடுப்பேன்.
மேலும் அந்த பணத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குவேன். மீதி பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார்.