search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலைமலர் செய்தி"

    • உயர் மின் கோபுர விளக்குகள் பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் இருந்தது.
    • அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற "மாலைமலர் " நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் நால்ரோடுமற்றும் பல்லடம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் இருந்தது.இதனால் அந்தப் பகுதிகளில் இருள் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்படுவதாக "மாலைமலர் " நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இச்செய்தியின் எதிரொலியாக நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று உயர் மின் கோபுர விளக்குகள் பழுதுபார்க்கப்பட்டது.

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்டு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற "மாலைமலர் " நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×