search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீபால விநாயகர்"

    • விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.
    • ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

    கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் (ஸ்ரீ ராகு தலம்) நாகநாத சுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தவக் கோலத்தில் தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ கிரி குஜாம்பிகைக்கு இருபுறமும் திருமகளும் கலைமகளும் பணி செய்ய நவசக்திகள் புடைசூழ பிந்து மத்தியில் நின்று தலம் இயற்றும் அம்பிகையின் தவச்சாலை காவலர்களாக ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீபால சுப்பிரமணியர், ஸ்ரீபால பைரவர், ஸ்ரீபால சாஸ்தா ஆகிய 4 பேரும் உள்ளனர்.

    இவர்களில் ஸ்ரீபால விநாயகர் இக்கோவிலில் கண் சுரம் தீர்த்த விநாயகராக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

    இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் உடல் நோயாகிய சுரத்தை தீர்த்து அருள்புரியும் மூர்த்தியாவார். இவ்விநாயகரை செவ்வாய், வெள்ளி, சதுர்த்தி ஆகிய நாட்களில் வணங்கி அபிஷேக ஆராதனை செய்து மிளகு நீர், மிளகு அன்னம், நீவேதித்து பிரசாதம் பெற்று உண்டு வந்தால் தீராத சுரம் தீர்ந்து நலம் பெறுவர் இடர்கடி கணபதியாக விளங்கும் இவ்விநாயகரை வழிபட்டு இம்மை, மறுமை துன்பங்கள் நீங்கி பக்தர்கள் இன்புறுவர்.

    ×