search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் விழிப்புணர்வு"

    • இரு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண்ணுடன், விதிமுறை மீறல் தொடர்பான புகைப்படத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

    சென்னை:

    சென்னையில் போக்கு வரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா மேம்பாலம் இணைப்பு சாலை மயிலாப்பூர், சின்னமலை, 100 அடி சாலை உள்ளிட்ட 16 இடங்களில் 76 ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த கேமராக்கள் மூலம் சிக்னலில் நிறுத்தக்கோட்டை தாண்டும் வாகனங்கள், சிக்னலை மீறிச்செல்லும் வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், தவறான திசையில் வாகனத்தை ஓட்டி செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கேமராக்கள் வாகனத்தின் பதிவு எண்ணுடன், விதிமுறை மீறல் தொடர்பான புகைப்படத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதன்படி சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இத்த கேமராக்கள் பற்றி விழிப்புணர்வு இல்லாத வாகன ஓட்டிகள் தங்களின் அறியாமையால் சாலைகளில் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் கட்டும் பரிதாப நிலையை அடைகிறார்கள். தங்களின் செல்போனுக்கு அபராதம் தொடர்பான இ-சலான் வந்த பிறகே இந்த ஏஎன்பிஆர் கேமராக்கள் குறித்த விவரத்தை அறிந்து கொள்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் ஏஎன்பிஆர் கேமராக்கள் பற்றி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் எடுக்க வேண்டும் என்று அபராதம் கட்டிய வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    ×