என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக அமைச்சர்"
- சனாதனம் ஒழிக்கப்பட வேண்டிய வியாதி என்றார் அமைச்சர் உதயநிதி
- 3 மாநிலங்களில் சென்ற தேர்தலை விட அதிகம் இடங்களை காங்கிரஸ் இழந்தது
செப்டம்பர் 2 அன்று ஒரு விழாவில் பேசிய தமிழக அமைச்சரும், தி.மு.க. முக்கிய தலைவருமான உதயநிதி, இந்து மத கோட்பாடுகளில் ஒன்றான சனாதன தர்மத்தை குறித்து பேசுகையில், "சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டும் அல்ல; டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டியது" என பேசினார்.
சர்ச்சையை கிளப்பிய உதயநிதியின் பேச்சிற்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆதரிக்கும் விதமாக கருத்து தெரிவித்தனர்.
பா.ஜ.க.வினர் உதயநிதிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர்.
ஆனால், தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், இது குறித்து திட்டவட்டமான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதை தொடர்ந்து, இந்து மத உணர்வினை புண்படுத்தியதாக உதயநிதி மீது அவமதிப்பு வழக்கு பல மாநிலங்களில் தொடரப்பட்டது. இது தொடர்பாக அவர் மீதான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின.
இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, பா.ஜ.க., பெரும்பான்மை எண்ணிக்கைக்கும் அதிகமாக இடங்களை பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. ம.பி.யில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு முயன்ற காங்கிரஸ் சென்ற தேர்தலை காட்டிலும் மேலும் பல இடங்களை பா.ஜ.க.விற்கு தாரை வார்த்துள்ளது.
தெலுங்கானாவில் மட்டும் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியை வென்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது.
3 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க. அமைச்சர் உதயநிதியின் சனாதானம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சுதான் காரணம் என சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருகிறது.
இதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
"சனாதன தர்மத்தை எதிர்த்து தலைவர்கள் பேசியதை காங்கிரஸ் தடுக்க தவறியது. இது தேர்தலில் எதிர்வினை ஆற்றியுள்ளது. அந்த சாபக்கேட்டின் காரணமாக காங்கிரஸ் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. மகாத்மா காந்தியின் கட்சியாக கருதப்பட்ட காங்கிரஸ் சனாதன எதிர்ப்பு கட்சியாக பார்க்கப்பட்டு விட்டது" என காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஆசார்ய பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான தெஹ்சின் பூனாவாலா, "சனாதன தர்மத்தை தரக்குறைவாக பேசியதும் அதை காங்கிரஸ் தடுக்காததும் தவறு. அதனால் காங்கிரஸ் வெற்றியை இழந்தது" என தெரிவித்தார்.
இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், "சனாதனத்தை தரக்குறைவாக பேசினால் அதற்கு எதிர் விளைவுகள் நிச்சயம் இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
தென் மாநிலங்களை காட்டிலும் வட மாநிலங்களில் இந்து மதத்தை உணர்வுபூர்வமாக அணுகும் வழக்கம் உள்ள நிலையில் சனாதனம் குறித்து தி.மு.க.வினரின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தடுக்க தவறியதால்தான், அதன் தலைவர்களின் தீவிர பிரசாரங்களையும் கடந்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதாக சில பயனர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5-மாநில தேர்தல்கள் பார்க்கப்பட்ட நிலையில், 3 மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு கிடைத்துள்ள வெற்றியும், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள தோல்வியும், கூட்டணிகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- செந்தில் பாலாஜி மட்டுமின்றி தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சரையும் பாரதிய ஜனதா பக்கம் இழுப்பதற்காக தூது விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
- தி.மு.க.வில் உள்ள அமைச்சர்களை அசைத்து பார்க்க திரை மறைவு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
சென்னை:
அ.தி.மு.க. 3 ஆக பிரிந்து கிடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இப்போதைக்கு தி.மு.க.தான் பெரிய கட்சியாக உள்ளது.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியையும் பாரதிய ஜனதா கட்சியையும் நேரடியாக எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். மதவாத பி.ஜே.பி. என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் தி.மு.க. ஆட்சியை அசைத்துப் பார்க்க பாரதிய ஜனதா மேலிடம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக தி.மு.க.வில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் சட்ட விரோத பணபரிவர்த்தனை செய்தவர்கள் யார்-யார் உள்ளனர் என்ற பட்டியலை எடுத்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போது அவரும், அவரது தம்பி அசோக் குடும்பமும் என்னென்ன பணபரிவர்த்தனை செய்து உள்ளனர் என்ற பட்டியலை அமலாக்கத்துறையினர் சேகரித்து வைத்துள்ளதாக தெரிகிறது.
ஆனாலும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அது பற்றி இன்னும் விசாரணை நடத்தவில்லை. இப்போது நடக்கும் விசாரணை அனைத்தும் ஜெயலலிதா ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர்-கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் வழங்காமல் பண மோசடி செய்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால் இன்னும் அவரை அமலாக்கத்துறையினர் விசாரிக்காமல் உள்ளனர்.
ஆனாலும் அமலாக்கத்துறையினர் இன்னும் 3 மாதம் கழித்து பொறுமையாக இருந்து டெல்லிக்கு அவரை கொண்டு சென்று விசாரிப்பார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர்.
2 ஆண்டு காலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி கையாண்ட விதம் குறித்து பல்வேறு விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
செந்தில் பாலாஜி மட்டுமின்றி தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சரையும் பாரதிய ஜனதா பக்கம் இழுப்பதற்காக தூது விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த அமைச்சர் மீதுள்ள வழக்குகளை வைத்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட முயற்சி எடுக்கப்பட்டதாகவும் இதற்காக அவருடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அந்த அமைச்சர் பிடி கொடுக்காமல் நழுவி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இப்படி தி.மு.க.வில் உள்ள அமைச்சர்களை அசைத்து பார்க்க திரை மறைவு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
எல்லா மாநிலத்திலும் ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை 'ரெய்டு' மூலம் மிரட்டி தங்கள் பக்கம் இழுக்கும் பார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த முடியுமா? என்று பி.ஜே.பி. முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்