search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீல் மேக்கர் சமையல்"

    • இந்த கிரேவி கறி குழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 50 கிராம்

    பெரிய வெங்காயம் - 2,

    தக்காளி - 4,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    பச்சை பட்டாணி - 1/4 கப்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    பட்டை - 1 துண்டு,

    கொத்தமல்லி தழை - சிறிதளவு

    சமையல் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு

    அரைக்க :

    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    இஞ்சி - ஒரு துண்டு,

    சோம்பு - அரை டீஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - இரண்டரை டீஸ்பூன்,

    தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்,

    முந்திரிப் பருப்பு - 10,

    பூண்டு - 6 பல்.

    செய்முறை :

    தக்காளி, கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை போட்டு அதில் சூடான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற விடவும். நன்றாக ஊறியதும் சாதாரணமான தண்ணீரில் இரண்டு முறை நன்கு அலசி தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் இறுக்கமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    மீல் மேக்கரை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை மற்றும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் சிறிதளவு வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள மீல் மேக்கரை போட்டு வதக்குங்கள்.

    அடுத்து தக்காளி, பட்டாணியை சேர்த்து வதக்குங்கள்.

    இப்போது பட்டாணி சேர்த்து வதக்கிய பின்பு, தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் கலந்து நிமிடங்கள் வைக்கவும்.

    தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி தழை, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கி விடலாம்.

    இந்த கிரேவி சாதத்துடன் மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம், பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×