search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா கனமழை"

    • கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    நேற்று இரவு முதல் கனமழையின் காரணமாக குடகு, உத்திர கன்னடா, சிக்கமங்களூரு, தக்சின கன்னடா, பெலகாவி, ஹாசன், தார்வாட், தாவண்கரே உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்கமங்களூரு, மைசூரு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது. ஹாரங்கி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 20 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், இன்று காலை முதல் கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 2,500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழை காரணமாக கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடகு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    ×