என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருகல்யாணம்"
- பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கம்.
- நாடி ஜோதிடத்துக்கு பரிகார சிறப்பு ஸ்தலமாகும்.
சென்னை அருகே பல்லாவரம் ரயில் நிலையம் அருகே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகழ் சோழ நல்லூர் என்ற பெயர் மருவி பொழிச்சலூர் கிராமத்தில் தொண்டை வள நாட்டு நவ கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு சுற்றுலா தலமாக விளங்கும் இவ்வாலயத்தில் இருக்கும் லிங்கம் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கம் ஆகும்.
இவ்வாலயத்தில் அகத்திய முனிவர் இமயம் விட்டு பொதிகை மலை நாடி தவம் புரிய வந்த பொது இங்கு தங்கி இந்த சுயம்பு லிங்கத்திற்கு பூஜை செய்து இவருக்கு இறைவன் காட்சி அளித்து அருள் தந்ததால் இறைவன் அகத்தீஸ்வரர் ஆகவும் இறைவி ஆனந்தவல்லி ஆகவும் காட்சி அளிக்கின்றனர்.
சனி பகவான் பாவத்தை போக்கி கொள்ள இங்கு நள்ளார் தீர்த்தம் உண்டு பண்ணி சிவ பெருமானை வழிபட்டு தான் பிறர்க்கு செய்த பாவத்தை போக்கி கொண்டதால் இவ்வாலயத்தில் சனி பகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியே எழுந்தருளியுள்ளார்.
இதனால் இவ்வாலயம் தொண்டை வள நாட்டு நவகிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஸ்தலமாக பொழிசை வட திருநள்ளார் என அழைக்கபடுகிறது.
மேலும் இதில் ஒரு சிறப்பு உள்ளது. இது ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது . ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு உண்டான, ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்று சிறப்பு அம்சங்கள் கொண்டதாகும்.
பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் இந்த ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர் களத்தில் கஜ பிருஷ்ட விமான அமைப்புடன் உள்ள ஸ்தலங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
இந்த ஆலயத்தில் ஈசன் கிழக்கு புறம் பார்த்து இருப்பதும், அம்மன் தெற்கு புறம் பார்த்து இருப்பதும் வடக்கு புற ராஜ கோபுர வாசல் அமைப்பு கொண்டு கட்ட பெற்றதாகும். பரம்பரையாக வேளாளர் மரபில் இருந்து தனியார் நிர்வாகத்தின் மூலம் நிர்வகிக்கும் ஆலயம் ஆகும்.
இவ்வாலயத்தில் மாணிக்கவாசகர் உற்சவம், ஆருத்திரா, மஹா சிவராத்திரி, சனி பெயர்ச்சி, கார்த்திகை தீபம், சங்காபிசேகம், வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய திருகல்யாணம், ராகு கால பூஜை, பிரதோஷம் மிக சிறப்பான விசேஷ தினங்கள் ஆகும்.
எனவே பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தில் தாங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த உங்கள் பாவங்களை போக்கி கொள்ளவும், ராகு கேதுவால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும், இவ்வாலயத்தில் வந்து முறைப்படி கேட்டு தெரிந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட எல்லா தோஷங்களுக்கும், பாவங்கள் நீங்கிடவும், வளமுடன் வாழ இங்கு பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாடி ஜோதிடத்துக்கு பரிகார சிறப்பு ஸ்தலமாகவும், தொண்டை நாட்டு நவகிரக சுற்றுலா ஸ்தலமாகவும் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கி வருகின்றது.
சர்ப்ப தோஷம் விலக
ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 -ம் இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது சர்ப்ப தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும், புனுகு பூச வேண்டும், நாகலிங்கப்பூமாலை அவருக்கு சார்த்த வேண்டும், பால் பாயாசம், பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.
யாருக்கு சர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன்பிறகு,கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர் 1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து வர வேண்டும்.
இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள் படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
பிடித்த வாழ்க்கைத் துணை அமைய
திருமணத்தடை அகல வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும். புனுகு பூசச் செய்து, தாமரை மலரை அணிவிக்க வேண்டும். அவல் கேசரி, பானகம், சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்.
படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர திருமணத்தடை நீங்கிவிடும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்