search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரத வழிமுறைகள்"

    • ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.
    • குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும்.

    1.சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.

    2.கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையையும் அணிய வேண்டும்.

    3.கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும். பெற்றோர் மூலமும் மாலை அணிந்து கொள்ளலாம்.

    4.அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும். இதேபோல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி 108 சரணம் கூறி ஐயப்பனுக்குப்பூஜை செய்ய வேண்டும். குளிப்பதற்குச் சோப்பு உபயோகிக்கக்கூடாது.

    5.இரவில் தூங்கும் போது தலையணை, மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

    6. பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனோ வலிமையைப் பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது. மாதர்கள் யாவரையும் மாதாவாகக் காண வேண்டும். மாதவிலக்குச் சமய மாதர்களுடன் பேசுவதோ, பார்ப்பதோ கூடாது.

    7.சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும். மது அருந்தக் கூடாது. பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.

    8. திரிகரண சுத்தி (மனம், வாக்கு, செயல்) ஆகிய வற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஐயப்பனை எண்ணத்தில் எப்பொழுதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக அய்யன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும். செய்யும் செயல்களும், பேசும் பேச்சுக்களும் நல்லவிதமாக அமையும்.

    9.சண்டை, சச்சரவுகளில் கலந்து கொள்ளக்கூடாது. எல்லோரிடமும் சாந்தமாகப் பழக வேண்டும்.

    10.காமம், கோபம், கஞ்சத்தனம், மோகம், அகம் பாவம், துவேஷம் முதலிய குணங்களைக் குறைப்பதற்கு உதவ எப்பொழுதும் அய்யப்பன் திருநாமத்தை உறுதுணையாக் கொள்ள வேண்டும். பக்தனின் நெஞ்சினில் எப்பொழுதும் நிறைந்து நிற்பது அய்யப்பனின் பேரொளி திருவுருவமேயாகும்.

    11. உரையாடும் போது சுவாமி சரணம் என்று சொல்லி துவங்குவதும், முடிக்கும் போதும் சுவாமி சரணம் என்று சொல்லி முடிப்பதும் நன்மைகளைத் தரும்.

    12. ஒரு ஐயப்ப பக்தரை வழியில் காண நேர்ந்தால் அவர் தெரியாதவராக இருந்தாலும் சுவாமி சரணம் என வணங்க வேண்டும்.

    13. மாலை அணிந்து காணப்படும் ஆண்களை ஐயப்பன் என்றும் பெண்களை மாளிகைப்புறம் என்றும் சிறுவர்களை மணிகண்டன் என்றும் சிறுமிகளைக் கொச்சு சுவாமி என்றும் அழைக்கவேண்டும்.

    14. குடை, காலணிகள், சூதாடுதல், திரைப்படங் களுக்குச் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

    15. விரத காலங்களில் உணவின் அளவைக் குறைத்து உடலைக்குறைத்துக் கொள்ள வேண்டும். மார்கழி மாதத்தில் பதினைந்து தினங்களுக்காவது ஒரு வேளை உணவை விடுத்து விரதம் இருக்க வேண்டும்.

    16. இலையில் சாப்பிடுவது நல்லது. உணவு உண்ண ஆரம்பிக்கும் பொழுது ஐயனை மனதில் நினைத்து, சரணம் கூறி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

    17. கன்னி சுவாமிகள் கன்னி பூஜை நடத்த வேண்டும் அல்லது ஒரு சுவாமிக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.விரத காலங்களில் இயன்ற வரை அன்னதானம் செய்ய வேண்டும்.

    18. நமது நெருங்கிய ரத்தத் தொடர்பு உள்ள தாய், தந்தை, சகோதரிகள் போன்றவர்களில் யாருக்காவது மரணம் ஏற்படுமாயின் மாலையைக் கழற்றி விட வேண்டும்.

    19. பெண்கள் ருது மங்கல சடங்கிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.

    20. விரத காலங்களில் தலைமுடி வெட்டிக் கொள்வதோ, சேவிங் செய்து கொள்வதோ கூடாது.

    21. மாலை அணிந்த எந்த ஐயப்பன் வீட்டிலும் உணவு அருந்தலாம். கடைகளில் சாப்பிடுவது, தெருக்களில் விற்கும் பலகாரங்களை உண்பது கண்டிப்பாகக்கூடாது.

    22. பக்தர்கள் நடத்தும் ஐயப்ப பூஜை, பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.

    • இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
    • அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர்.

    பங்கு மாத உத்திரத்திறகு முந்தின 15ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.

    இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும்,

    அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர்.

    இந்த ஊர்வலம் 8ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும்.

    மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள்.

    மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.

    முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும்.

    இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர்.

    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும். தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.

    மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார்.

    பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

    இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    • பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.
    • இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    திருச்சி தாயுமானவர் ஆலயம் குழந்தைப்பேறு, சுகப்பிரசவ பிரார்த்தனை தலம்.

    தென்னகத் தலங்களுள் இத்தலத்தை தென் கயிலாயம் என்பர்.

    நில எல்லையில் இருந்து பார்த்தால் மூன்றடுக்கு உடையதாக இம்மலை தோற்றமளிக்கும்.

    மட்டுவார் குழலியம்மன் திருக்கோவில், தாயுமானவர் கோவில். உச்சிப் பிள்ளையார் கோவில் என அமைந்துள்ளது.

    மேற்கு பார்த்த மூர்த்தலிங்கம் தமிழகத்தின் நான்காவது பெரிய லிங்கம் ஆகும்.

    பங்குனி மாதம் இக்கோவிலில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அதில் 9ம் நாள் அன்று பங்குனி உத்திரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும்.

    10ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். இத்தெப்பத்திற்கு தான் தாயுமானவர் தெப்பம் என பெயர்.

    பங்குனி மாத 15ம் நாளன்று கொடியேற்றம் நடைபெறும்.

    ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரமாக இருக்கும்படி தான் விழா ஏற்பாடு செய்வார்கள்.

    இரண்டாம் நாள் கற்பக விருட்சம். மூன்றாம் நாள் பூதவாகனம்,

    நான்காம் நாள் கைலாச பர்வதம், ஐந்தாம் நாள் வெள்ளை ரதம், ஆறாம் நாள் யானை வாகனம்,

    ஏழாம் நாள் நந்தி வாகனம், எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் தெப்ப உற்சவம்,

    பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் விழா இனிதே நடைபெற்று முடிவடையும்.

    • ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.
    • இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    திருநெல்வேலி மாவட்ட தென்கோடியில் தெற்கு கருங்குளம் என்ற கிராமத்தில் பூ அய்யப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

    இங்கு பங்குனி உத்திரத்தன்று மெகா கொழுக்கட்டை வழிபாடு செய்கின்றனர்.

    இது முழுக்க முழுக்க ஆண்களே செய்யும் வேலை.

    விரதம் இருந்து, எச்சில் படாமல் இருக்க வாயில் துணி கட்டிக் கொண்டு செய்வர்.

    ஒரு கோட்டை நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசி 42 படி இருக்கும்.

    இது கிலோ கணக்கில் பார்த்தால் 63 கிலோ வரும் இந்தப் பச்சரிசியை ஆண்களே இடித்து மாவாக்குவார்கள்.

    மாவில் நீர் விட்டுப் பிசைந்து உருட்டித் தட்டுவார்கள்.

    இதை காட்டுக் கொடி நிரவி, அதன் மீது இலைகளை பரப்பி உருட்டித் தட்டிய அரிசி மாவை அடுக்குவார்கள்.

    அதன் மீது சிறுபயறு, தேங்காய்த் துருவல் கலந்து பூரணத்தையும் வைப்பர்.

    இப்படி மாவு, பூரணம் என மாறி மாறி அடுக்கியபின் காட்டு இலையை பரப்பி மூடி,

    காட்டுக்கொடியால் உருண்டை வடிவில் கட்டிவிடுவார்கள்.

    மெகா கொழுக்கட்டை உருவாகி விட்டது.

    இதற்கு முன்பே கட்டைகள் எடுத்து தணல் உருவாக்கி இருப்பார்கள்.

    ஆலய பூசாரி பூஜை முடிப்பார். அப்போது அவருக்கு அருள் வரும்.

    சாமி ஆடியப்படியே ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கும் கொழுக்கட்டையை இவர் ஒருவரே அனாயசமாகத் தூக்கி தணல் நடுவே போடுவார்.

    யாராலும் நெருங்க முடியாத தணலில் அங்கிருந்து கொழுக்கட்டையை உருட்டிப் புரட்டி வேக வைத்து விடுவார்.

    இரவில் வெந்த கொழுக்கட்டையை பூஜித்து படையல் போடுவார்கள்.

    ஆயிரக்கணக்கானோர் இவ்வழிபாட்டை தரிசிப்பார்கள்.

    பின் மறுநாள் கொழுக்கடையை பிரித்து ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள்.

    • இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம் நடந்தது.
    • முத்துக் குமாரசுவாமியை வணங்கி வர நிச்சயமாக திருமணம் கைகூடும்.

    வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகையில் வரும் கார்த்திகை,

    தைப்பூசம் ஆகிய சிறப்பு நட்சத்திரங்களின் வரிசையில் வருவது பங்குனி உத்திரம் ஆகும்.

    இந்த நாளில்தான் சிவபார்வதி திருமணம், முருகன்வள்ளி திருமணம்,

    சாஸ்தாவின் பிறப்பு ஆகியவை இந்த நட்சத்திர தினத்தில்தான் நடந்தது.

    செவ்வாய் தோஷமா?

    முருகப்பெருமான் பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்தவர் என்பதால், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள், ஜாதக ரீதியாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்,

    காரணமின்றி திருமணம் தடைபடுபவர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக் குமாரசுவாமியை (முருகன்)

    வணங்கி வர நிச்சயமாக உரிய பலன்கள் கிடைக்கும்.

    • சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.
    • விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.

    நெல்லை மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா என்ற கோவில் உள்ளது.

    ராம நதிக்கரையில் குடிகொண்டுள்ள இவர் ராமரால் உருவாக்கப்பட்டவர்.

    பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா இருப்பதால் இவருக்கு மகிமை அதிகம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.

    பங்குனி உத்திரத்தில் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் பறந்தோடி விடும் என்று நம்பப்படுகிறது.

    அவதார நட்சத்திரம்

    மகிஷி என்ற அரக்கியை அழிக்க தேவர்கள் விரும்பினார்கள்.

    அவளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்காத ஒருவரே அழிக்க முடியும் என்பதால்,

    விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.

    அந்த மகன் தர்மசாஸ்தா ஆவார்.

    இவர் மகிஷியை அழித்தார். அய்யப்பனின் அவதாரமாகக் கருதப்படுவது இவரே.

    சாஸ்தா அவதாரம் எடுத்தது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.

    • சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.
    • மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

    உத்திர நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்களும், திருமணத்துக்குப் பிறகு பொருளாதார அல்லது மனரீதியாகத் துயரப்படும் பெண்களும்

    பங்குனி உத்திரம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் குளிக்க வேண்டும்.

    பிறகு முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத இன்னல்களும் தீரும்.

    வெறும் வயிற்றுடன் வணங்காதீர்

    பங்குனி உத்திரம் நாளன்று காலையில் வழக்கமான உணவை சாப்பிட வேண்டும்.

    ஏனெனில் சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.

    அரை வயிறுக்கு சாப்பிட்டுவிட்டு, காடுகளில் இருக்கும் சாஸ்தாவை வணங்க செல்ல வேண்டும்.

    மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

    அதை மதிய உணவாகக் கொள்ளலாம். இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது.

    ×