என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஆன்மிக களஞ்சியம்
![பெருமாள் பெயரில் சாஸ்தா பெருமாள் பெயரில் சாஸ்தா](https://media.maalaimalar.com/h-upload/2023/09/26/1956572-005.webp)
பெருமாள் பெயரில் சாஸ்தா
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.
- விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார் குறிச்சியில் காக்கும் பெருமாள் சாஸ்தா என்ற கோவில் உள்ளது.
ராம நதிக்கரையில் குடிகொண்டுள்ள இவர் ராமரால் உருவாக்கப்பட்டவர்.
பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா இருப்பதால் இவருக்கு மகிமை அதிகம்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள சிலை போலவே இவரது சிலையும் காட்சியளிக்கிறது.
பங்குனி உத்திரத்தில் இவரை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் பறந்தோடி விடும் என்று நம்பப்படுகிறது.
அவதார நட்சத்திரம்
மகிஷி என்ற அரக்கியை அழிக்க தேவர்கள் விரும்பினார்கள்.
அவளை ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறக்காத ஒருவரே அழிக்க முடியும் என்பதால்,
விஷ்ணு மோகினி வடிவெடுத்து சிவனுடன் இணைந்து ஒரு மகனைப்பெற்றார்.
அந்த மகன் தர்மசாஸ்தா ஆவார்.
இவர் மகிஷியை அழித்தார். அய்யப்பனின் அவதாரமாகக் கருதப்படுவது இவரே.
சாஸ்தா அவதாரம் எடுத்தது பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.