என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் கவுன்சிலர் கொலை"
- ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது
- ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார்.
வேலாயுதபாளையம்:
ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சோழ காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 57). இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ரூபா (42). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரூபா, சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கரூர் சென்றார். பின்னர் ரூபா அன்று இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரூபாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரூபா தலை நசுங்கிய நிலையில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வேலாயுதம்பாளையம்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபாவுடன் பணியாற்றி வரும் நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரூபா அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு நித்யா தனது கணவருடன் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.
இதை எடுத்து நித்யா(28) அவரது கணவர் கதிர்வேல் (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான நித்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;-
எனது கணவர் இவர் ஈரோடு-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் டீ கடை வைத்துள்ளார்.
ரூபா வேலைக்கு வரும் போதெல்லாம் நகை அதிகமாக அணிந்து வருவார். இதனை எனது கணவரிடம் கூறினேன்.
பின்னர் நகைக்கு ஆசைப்பட்டு ரூபாவை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த ரூபாவிடம் பவுத்திரம் பாலமலை முருகன் கோவிலுக்கு போகலாம் என நைசாக அழைத்தேன். அவரும் என் பேச்சை தட்டாமல் வந்தார். பின்னர் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஏற்கனவே தயாராக இருந்த எனது கணவர் வந்தார். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வைத்து நானும் கணவரும் ரூபாவின் கழுத்தை நெரித்து தலையில் கல்லை வைத்து நசுக்கி கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தோம்.போலீசை திசை திருப்புவதற்காக அவரது களைந்து அரை நிர்வாணமாக்கி விட்டு தப்பிச் சென்றோம். ஆனால் போலீசார் துப்பு துலக்கி பிடித்து விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்