search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுப்புநில ஏரி"

    • அனைத்து வகை வெளிநாட்டு பறவைகளும் வந்து உள்ளதால் பள்ளிக்கரணை ஏரி பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
    • அக்டோபர் முதல் வாரத்திற்கு மஞ்சள் வாலாட்டி குருவி வருகை தரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் வந்து உள்ளது.

    தொடர்ந்து பெய்த மழை காரணமாக பள்ளிக்கரணை சதுப்புநில ஏரி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் வெளிநாட்டு பறவைகள் பள்ளிக்கரணை ஏரிக்கு வருவது வழக்கம். தற்போது ஏரியில் நீர் நிரம்பி காணப்படுவதால் பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. நீலச்சிறகு வாத்து, சாம்பல்லை, தட்டைவாயன், மஞ்சள் வாலாட்டி, கிருவைததாரா வாத்து உள்ளிட்ட பறவைகள் வந்து உள்ளன. முதல் கட்டமாக வரும் அனைத்து வகை வெளிநாட்டு பறவைகளும் வந்து உள்ளதால் பள்ளிக்கரணை ஏரி பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    இதேபோல் சிவப்பு கழுத்து பருந்து, விரால் அடிப்பான் பருந்து மற்றும் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு போன்றவைகளும் காணப்படுகின்றன. வெள்ளை வாலாட்டி, கொடிக்கால் வாலாட்டி ஆகியவை இன்னும் 10 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பறவைகள் நலஆர்வலர் ஒருவர் கூறும்போது, செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து அக்டோபர் முதல் வாரத்திற்கு மஞ்சள் வாலாட்டி குருவி வருகை தரும். வழக்கம்போல் இந்த ஆண்டும் வந்து உள்ளது. இவை எதிர்பார்த்த நேரத்தில் வந்து சேர்ந்து உள்ளன. வழக்கமாக ஏரிக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் 72 புலம்பெ யர்ந்த பறவைகள் உட்பட 196 வகையான பறவைகள் கடந்த சில ஆண்டுகளாக வருவது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது என்றார்.

    ×