search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கன் ஊற்று"

    • இடும்பன் கோவிலுக்கு நேர் தெற்கில் கொஞ்ச தூரத்தில் வக்கன் ஊற்று ஒன்று உள்ளது.
    • பக்தர்கள் பயபக்தியுடன் இச்சுவட்டை பூஜிக்கின்றனர்.

    வக்கன் ஊற்று

    இடும்பன் கோவிலுக்கு நேர் தெற்கில் கொஞ்ச தூரத்தில் வக்கன் ஊற்று ஒன்று உள்ளது.

    அது ஒரு காலத்தில் பிரபல தீர்த்தமாக இருந்தது.

    தற்பொழுது வறட்சியால் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

    குதிரைக் குளம்பு

    இடும்பன் கோவிலைத் தாண்டியதும் குதிரைக் குளம்பு என்கிற அருட்சின்னம் மண்டபத்துடன் வெகுரம்மியமாக இருக்கிறது.

    பக்தர்கள் பயபக்தியுடன் இச்சுவட்டை பூஜிக்கின்றனர்.

    ஒரு உயரிய குத்துப்பாறையில் இயற்கையாகவே ஒரு குதிரையின் கால் குளம்படிச் சுவடு பதிந்துள்ளது.

    முருகன் நீலமேகப் புரவியிலே தன் படைகளுடன் சூரர்களை வெல்ல புறப்படும் போதோ அல்லது வென்று திரும்பி வந்தபோதோ,

    முருகனின் சீற்றம் மிக்க குதிரையின் குளம்பு அழுந்தியது என்றும் முருகன் தன் உண்டியலைத் திருடிய திருடர்களைத் துரத்திச் சென்ற போது

    படிந்த குதிரைக்குளம்பு என்றும் சொல்கிறார்கள்.

    ×