என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனந்த பத்மநாப விரதம்"

    • பெருமாளாகிய அனந்த பத்மநாப சுவாமியைக் கருதி அனுஷ்டிக்கும் விரதமாகும் இது.
    • இந்த விரதம் அனுஷ்டிப்போர் இழந்த செல்வங்களை மீண்டும் பெறுவார்கள்.

    ஆவணி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில் இந்த விரதம் வரும்.

    பெருமாளாகிய அனந்த பத்மநாப சுவாமியைக் கருதி அனுஷ்டிக்கும் விரதமாகும் இது.

    இதை அனுஷ்டிப்பவர்களுக்கு செல்வம் பெருகும்.

    அனந்த பத்மநாப விரத தினத்தன்று பெருமாள் படத்தை வைத்து முறைப்படி பூஜை, பாராயணம் முதலியன செய்ய வேண்டும்.

    இனிப்புப் பண்டங்களைச் சமர்ப்பிக்கலாம். தூப நைவேத்தியங்கள் உகந்தது.

    பதினான்கு முடி போட்ட மஞ்சள் கயிற்றை குங்குமத்தில் தோய்த்து பத்மநாப சுவாமியிடம் வைத்து

    பின் எடுத்து இடது மணிக்கட்டில் கயிற்றை கட்டிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் செய்து பதினான்காம் ஆண்டு அன்னதானம் செய்ய வேண்டும்.

    பின்னர் ஆயுள் முழுவதும் அனுசரிக்கலாம்.

    இந்த விரதம் அனுஷ்டிப்போர் இழந்த செல்வங்களையும், சக்திகளையும் மீண்டும் பெறுவார்கள்.

    ×