என் மலர்
நீங்கள் தேடியது "இறைச்சி கடைகள் அகற்றம்"
- தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.
- ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன.
ஆட்டு இறைச்சி விற்பதற்கும் கடை நடத்துவதற்கும் உரிய நகராட்சி அனுமதி இல்லாமல் நடப்பதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஆட்டு இறைச்சி தரம் உள்ளது என்றும், புதிதாக வெட்டப்பட்டது என்பதற்கும் நகராட்சி மூலம் ஒப்புதல் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என்பது நடைமுறை.
ஆனால் போடியில் தற்போது புற்றீசல் போல பெருகிவரும் ஆட்டிறைச்சி கடைகள் உரிய அனுமதி இன்றியும் நகராட்சி அனுமதி பெறாமல் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்தன.
மேலும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று கடைகள் நடத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து ஆக்கிரமிப்பில் இயங்கிய ஆட்டு இறைச்சி கடைகள் நகராட்சி மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.