என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்மார்ட் ரிங்"
- நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.
- கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.
தினசரி நாம் செய்யும் உடற்பயிற்சிகளை கணக்கில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலரால் ஆப்பிள் மற்றும் சாம்சங் கைக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விற்பனை வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
தினசரி ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்ட கேலக்ஸி ரிங், சாம்சங்கின் மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பத்தை கச்சிதமான, விவேகமான வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
இது 24 மணி நேரமும் உடல் நலன் கண்காணிப்பை வழங்குகிறது. 2.3 கிராம் மற்றும் 3.0 கிராம் வரை எடை கொண்டது. மேலும் ஒன்பது அளவுகளில் கிடைக்கிறது. 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. இந்த ரிங்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.
இதய துடிப்பு, சுவாசம், உறக்கம், உடல் வெப்ப அளவு ஆகியவற்றை கணக்கிடும் வகையில் AI அல்காரிதம் கொண்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.33,404-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஹெல்த் ஆப் மூலம் இதயத் துடிப்பு விவரங்களைப் பயனர்களுக்கு ரியல்டைமில் தெரிவிக்கும் வசசதியை கேலக்ஸி ரிங் கொண்டிருக்கிறது. நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.
கூடுதலாக, நடைபயிற்சி மற்றும் ஜாகிங்-ஐ கண்காணிப்பதற்கான ஆட்டோ ஒர்க்அவுட் கண்டறிதல், தினசரி உடற்பயிற்சி நினைவூட்டல்களுக்கான நோட்டிபிகேஷன் வழங்குகிறது. இதில் புகைப்படங்களை எடுப்பது அல்லது அலாரங்களை நிராகரிப்பது போன்ற செயல்பாடுகளுக்கான சைகை கட்டுப்பாடுகள் உள்ளன.
கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.
- இந்திய சந்தையில் இத்தகைய வசதி கொண்ட முதல் ஸ்மார்ட் ரிங் இது ஆகும்.
- புதிய ஸ்மார்ட் ரிங் ப்ளூடூத் தொழில்நுட்பம் இன்றி செயல்படுகிறது.
போட் மற்றும் நாய்ஸ் பிரான்டுகளை தொடர்ந்து செவன் எனும் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் ரிங் கான்டாக்ட்லெஸ் பேமன்ட் செய்யும் வசதியை வழங்குகிறது.
செவன் நிறுவனத்தின் புதிய 7 ரிங்-ஐ மெல்ல தட்டினாலே பேமண்ட் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் ரிங் அதிநவீன என்.எஃப்.சி. (NFC) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில், இந்த ஸ்மார்ட் ரிங் ஏழுவித அளவுகளில் கிடைக்கிறது.
ஸ்மார்ட் ரிங் சார்ந்த அம்சங்களை இயக்குவதற்காக பிரத்யேக செயலி (ஆப்) ஒன்றும் வழங்கப்படுகிறது. இது பரிமாற்றங்களை பாதுகாப்பாகவும், மிகவும் எளிமையாகவும் மாற்றுகிறது.
பயன்படுத்துவது எப்படி?
புதிய 7 ரிங் என்.எஃப்.சி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்வதேச பேமன்ட் வழிமுறைகளில் பணப்பரிமாற்றம் செய்கிறது. இதற்காக முதலில் ஸ்மார்ட் ரிங்-ஐ செட்டப் செய்ய வேண்டும். பிறகு அதை பயன்படுத்த, பயனரின் வங்கி கணக்கில் இருந்து கணிசமான தொகையை அதில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரீபெயிட் வாலெட்டில் சேர்க்கப்பட்ட தொகையை, முதற்கட்ட வெரிஃபிகேஷன் நிறைவுற்ற பிறகு செலவு செய்ய முடியும். ஆனாலும், இதற்கான வரம்பு மாதத்திற்கு ரூ. 10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வீடியோ கே.ஒய்.சி. (KYC) வழிமுறையை நிறைவு செய்த பிறகு அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையிலான தொகையை ஸ்மார்ட் ரிங் வாலெட்டில் சேமித்துக் கொள்ளலாம். இத்துடன் வழங்கப்படும் செயலியை கொண்டு பரிமாற்றங்களை சரிபார்க்கவும், எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தவும், தொலைந்து போன ரிங்-ஐ பிளாக் செய்யவும் முடியும்.
ஸ்மார்ட் ரிங் மூலம் பணம் செலுத்துவதற்கு பேமன்ட் இயந்திரத்தின் அருகில் ரிங் அணிந்திருக்கும் கையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பிற்காக கைவிரல்களை மூடியிருக்க வேண்டும். கைவிரல் நீண்டிருந்தால், பணம் அனுப்ப முடியாது. பேமன்ட் இயந்திரம் ரிங்-க்கு சக்தியூட்டும். இதனால் அதனை சார்ஜ் செய்ய வேண்டாம். மேலும் இது ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை.
இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டு இந்தியாவில் உள்ள யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இது ஆன்லைன் பேமன்ட் மற்றும் இந்தியாவுக்கு வெளியில் பேமன்ட் சேவைகளை சப்போர்ட் செய்யாது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
செவன் நிறுவனம் தனது புதிய 7 ஸ்மார்ட் ரிங் விலையை ரூ. 7 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து இருக்கிறது. அறிமுக சலுகையாக பயனர்கள் இதனை ரூ. 4 ஆயிரத்து 777 விலையிலேயே வாங்கிட முடியும். 7 ரிங் வேலிடிட்டி 55 மாதங்கள் ஆகும். இதற்கான வாரண்டி ஒரு வருடம் ஆகும். ஏற்கனவே 7 ரிங் வைத்திருக்கும் பயனர்கள் வழங்கும் இன்வைட் மூலமாக இதனை வாங்கிட முடியும்.