என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மியான்மர் ராணுவ வீரர்கள்"
- தியாவ் நதிக்கு அருகே சாய்கும்பாய் பகுதியின் வழியாக அவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தனர்.
- மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அசாம் ரைபிள் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐஸ்வால்:
மியான்மர் நாட்டு எல்லையில், சில குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், ராணுவ முகாம் ஒன்றை கைப்பற்றினர். சில ராணுவ வீரர்களை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்தனர். அப்போது மியான்மர் ராணுவ வீரர்கள் ஏராளமானவர்கள், எல்லையை ஒட்டி இருந்த இந்திய பகுதியான மிசோரமில் புகுந்தனர். அவர்களில் சுமார் 40 பேர் மிசோரம் போலீசாரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தஞ்சம் அடைந்தனர். இருநாட்டு ராணுவ பேச்சுவார்த்தைக்கு பின்பு, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது மேலும் 29 மியான்மர் ராணுவ வீரர்கள் மிசோரமில் நுழைந்திருப்பது தெரியவந்து உள்ளது. அவர்கள் நேற்று முன்தினம் மிசோரம் போலீசார் மற்றும் அசாம் ரைபிள் ராணுவ பிரிவினரிடம் தஞ்சம் கேட்டனர். தியாவ் நதிக்கு அருகே சாய்கும்பாய் பகுதியின் வழியாக அவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தனர். அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அசாம் ரைபிள் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2021-ல் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பொது மக்களும், பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.