search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரியபகவான்"

    • இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத்தரும்.
    • காலை சூரிய உதயமுதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங்கண்ணால் தரிசிக்கலாம்.

    சூரியனை உதயகாலத்தில் வெறுங்கண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி, தியான மந்திரம், அஷ்டோத்ரம் ஆகியவற்றை சொல்லி வணங்க வேண்டும்.

    உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்று முழு வட்டவடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பார்.

    இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத்தரும்.

    கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடைகிறது. இதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

    ¥ ஆத்மபலம், ¥ மனபலம், ¥ தேகபலம், ¥ எதிர்ப்பு சக்தி,¥ நோய் நிவர்த்தி, ¥ எதையும் சந்திக்கும் மனதைரியம், ¥ ஆண்மை, வீரியம் அதிகரித்தல், ¥ அறிவாற்றல், நினைவாற்றல், ¥ சிந்தனாசக்தி அதிகரித்தல், ¥ நிர்வாகத்திறன் கூடுதல், ¥ மனத்தூய்மை, ¥ முகத்தில் தேஜஸ் (ஒளி), ¥ வசீகரம், ¥ பேச்சாற்றல், ¥ எதிலும் பெற்றிபெறும் மனநிலை, ¥ நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, ¥ தாழ்வு மனப்பான்மை விலகுதல், ¥ ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், ¥ எண்ணங்களுக்கு வலிரத உண்டாகும். ¥ சத்ருக்களை ஜெயித்தல், ¥ எத்தகைய பிரச்சினைகளில் இருந்தும் வெற்றி பெறுதல், ¥ கண்பார்வை சக்தி அதிகரித்தல், ¥ கண் நோய் நீங்குதல், ¥ படைப்பாற்றல் உண்டாகுதல்.

    சூரியனின் ஆற்றல் முழுவதும் நம்முள் வந்துவிடும்! அப்புறம் என்ன வேண்டும்? நாமே சூரியன் தான்!!

    தரிசன நேரம்:

    காலை சூரிய உதயமுதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங்கண்ணால் தரிசிக்கலாம்.

    மார்பளவு தண்ணீரில், ஏரி, குளம், ஆறுகளில் நின்று கொண்டு இருகைகூப்பி சூரியனை பார்த்து வெறுங்கண்ணால் தரிசிக்க வேண்டும்.

    குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

    தரிசிக்கும்போது காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லிக் கொண்டே தரிசித்து வணங்க வேண்டும்.

    இதனால் உடலிலும், மனதிலும் எண்ணற்ற ஏற்றமான மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக உணரலாம்.

    • ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
    • ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

    ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே சூரியன்".

    அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.

    ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர்.

    சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

    ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே.

    எனவே தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர்.

    சஞ்சலமாக இருந்த அர்ஜூனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார்.

    இதனால் தான் ஆவணி மாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது".

    சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனாலேயே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக் கொள்கின்றனர்.

    இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம்.

    இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

    இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம்" சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

    ஒளிதரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

    கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.

    முறைப்படி செய்யும் சூரிய நமஷ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.

    எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்தாயாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

    அக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும்.

    பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது.*

    • ஆட்சி பெறும் ராசி சிம்மம்
    • சொந்த நட்சத்திரம் கிருத்திகை, உத்திரம்,

    ஆட்சி பெறும் ராசிசிம்மம்

    உச்சம் பெறும் ராசிமேஷம்

    நீச்சம் பெறும் ராசிதுலாம்

    நட்பு பெறும் ராசிகள்விருச்சிகம், தனுசு, மீனம்

    சமராசிகள்மிதுனம், கடகம், கன்னி

    பகை பெறும் ராசிகள்ரிஷபம், மகரம், கும்பம்

    மூலத்திரிகோணம்சிம்மம்

    சொந்த நட்சத்திரம்கிருத்திகை, உத்திரம்,

    உத்திராடம்

    திசைகிழக்கு

    அதிதேவதைஅக்னி, சிவன்

    ஜாதிஷத்திரியன்

    நிறம்சிவப்பு

    வாகனம்மயில், ஏழு குதிரைகள் பூட்டிய

    தேர்

    தானியம்கோதுமை

    மலர்செந்தாமரை

    ஆடைசிவப்பு நிற ஆடை

    ரத்தினம்மாணிக்கம்

    நிவேதனம்சர்க்கரைப் பொங்கல்

    செடி/விருட்சம்வெள்ளெருக்கு

    உலோகம்தாமிரம்

    இனம்ஆண்

    அங்கம்தலை, எலும்பு

    நட்பு கிரகங்கள்குரு, சந்திரன்

    பகை கிரகங்கள்சுக்கிரன், சனி

    சுவைகாரம்

    பஞ்ச பூதம்நெருப்பு

    நாடிபித்த நாடி

    மணம்சந்தன வாசனை

    வடிவம்சம உயரம்

    சூரியனுக்குரிய கோவில்சூரியனார் கோயில், ஆடுதுறை,

    தஞ்சாவூர் (தமிழ்நாடு)

    கோனார்க் (ஒரிசா)

    திதி- சப்தமி

    கிழமை- ஞாயிறு

    ஓரை-சூரிய ஹோரை

    பிரத்யதி தேவதை- ருத்திரன்

    • பண்டைய எகிப்தில் பல சூரியக் கோவில்கள் இருந்துள்ளன.
    • பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக “உழவர் திருநாள்” கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

    சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது.

    அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.

    இதனால்தான் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக "உழவர் திருநாள்" கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லலும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம்.

    அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.

    வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

    பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன.

    நம் பாரதத்தில் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது

    கிரேக்க நாட்டினர் சூரியனை, இவ்வுலகைப் படைத்தவர் எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோவாசிகளும் அப்படியே.

    அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது.

    அது மட்டுமல்ல கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர்.

    வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும், என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர்.

    அரசனை சூரியனின் வம்சத்தில் உதித்ததாகக் கருதி, ஜப்பானியர்கள் சூரியனை வழிபடுகின்றனர்.

    பண்டைய எகிப்தியர்கள் உதய ரவியை ஹோரஸ் என்றும், நண்பகல் சூரியனை ஆமென்ரர் என்றும் மாலைச் சூரியனை ஓசிரில் என்றும் அழைத்தனர்.

    டைப்போ என்ற இருளரக்கன், முதலை உருவத்தில் வந்து மாலையில் ஓசிரிலை விழுங்கிவிடுவதாகவும், மறுநாள் காலையில் ஹோரஸ் அவனை வென்றுவிடுவதாகவும் நம்பினர்.

    பண்டைய எகிப்தில் பல சூரியக் கோவில்கள் இருந்துள்ளன.

    சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

    இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர்.

    வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன.

    அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன.

    நேபாளத்தில் இன்றும் சூரியக் கோவில்கள் உள்ளன.

    அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

    இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

    • நட்பு வீடுகள்-விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்
    • உறைவிடம்-தேவாயதனம் கோவில்

    இனம்-ஆண்,

    நிறம்-சிவப்பு,

    ஜாதி-ஷத்திரியன்,

    வடிவம்-சமஉயரமானவர்,

    அவயம்-தலை,

    உலோகம்-தாமிரம்,

    ரத்தினம்-மாணிக்கம்,

    வஸ்திரம்-சிவப்பு நிறம்,

    தூபதீபம்-சந்தனம்,

    வாகனம்-தேர்,

    சமித்து-எருக்கன்,

    சுவை-கார்ப்பு,

    பூதம்-தேயு (அக்கினி)

    நாடி-பித்தம்,

    திக்கு-கிழக்கு,

    அதிதேவதை-சிவன்,

    தன்மை-ஸ்திரம்,

    குணம்-தாமஸம்,

    தான்யம்-கோதுமை,

    புஷ்பம்-செந்தாமரை,

    பாஷைகள்-இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.

    நட்சத்திரங்கள்-கிருத்திகை,

    உத்திரம், உத்திராடம்,

    மணி-சூரியகாந்தம்,

    காரகத்துவம்-பித்ருகாரன்,

    உறைவிடம்-தேவாயதனம் கோவில்,

    அர்க்க பத்ரம்-எருக்கு இலை,

    அன்னம்-கோதுமை சக்கரான்னம்,

    நட்பு வீடுகள்-விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்,

    பகை வீடுகள்-ரிஷபம், மகரம், கும்பம்,

    உச்சம்-மேஷம், நீசம்-துலாம், முலதிரிகோணம் சிம்மம்,

    ஆட்சிகாலம்-6 வருடங்கள்,

    பலன்-ஆரம்ப காலத்தில் கொடுப்பார்.

    மார்க்கம்-ராசியைப் பிரதச்ஷினமாக சுற்றி வருவார்.

    மூன்று ருக்கள்: வஸந்தருது-இளமை, கிரீஷ் மருது-நடுவயது, சரத்-மூப்பு

    • உலகத் தோற்றத்தின் போது முதல் முதலில் ஓம் என்ற ஓசை உண்டாயிற்று.
    • அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறம் உடையவை.

    உலகத் தோற்றத்தின் போது முதல் முதலில் ஓம் என்ற ஓசை உண்டாயிற்று.

    அந்த ஓசையிலிருந்து ஒளிமயமான சூரியன் தோன்றினான் என்று வேதங்களில் மார்கண்டேய புராணம் கூறுகிறது.

    நூல்களில் ரிக் வேதம் மிகவும் பழமையானது.

    இவ்வேதத்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாரத நாட்டில் சூரிய வழிபாடு நடைபெறுவதை அறிய முடிகிறது.

    சூரியன் கண்கண்ட தெய்வம். வானவெளியில் நாம் காணும் சூரிய பகவான் ஏறிவரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் உண்டு.

    அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான ஏழு நிறம் உடையவை.

    இந்த குதிரைகளை ஓட்டுகின்ற சாரதி அருணன். இவன் காலில்லாத நொண்டி. அத்தேர் மேற்கு முகமாக ஓடுகிறது.

    மேரு மலையை வலமாகச் சுற்றி வருகிறது.

    இவர் "ஆடி முதல் தை" வரை வடக்கிலிருந்து தெற்கு திசையில் செல்லுகிறார்.

    இதை தஷணாயணம் என்கிறோம். அவரே "தை முதல் ஆனி" வரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறார். இதை உத்தராயணம் என்கிறோம்.

    சூரியனுக்கு உஷாதேவி, பிரத்யுஷாதேவி என்ற இருவரும் மனைவிமார்கள். யமன், சனி, அசுவினித்தேவர், முதலியோர் புத்திரர்கள், யமுனை, பத்திரை முதலியோர் புத்திரிகள்.

    சூரியனைக் குறிக்க அருக்கண், ஆதித்தன், கதிரவன், கமலவினாயகன், கனலி, ஞாயிறு, தினகரன், பகலவன், பகன், பரிதி, பானு, மார்த்தாண்டன், ரவி, வெங்கதிரோன், வெய்யோன் முதலிய பல பெயர்களும் வழங்கப்படுகின்றன.

    பிரம்மதேவரின் சாபத்தால் சூரிய பகவான் தொழு நோயால் துயர் அடைந்தார். அந்த துயர் போக்க இங்கு உள்ள தடாகத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டதால் தொழு நோய் நீங்கியது.

    சூரிய பகவான் நீராடியதால் சூரிய தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.

    • சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதி ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும்.
    • யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று ராமர் யோசித்துக்கொண்டிருந்தார்.

    சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதி ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும்.

    இந்த துதி எவ்வாறு ராமபிரானுக்கு அகத்திய முனிவரால் உபதேசிக்கப்பட்டது என்பது தெரியுமா?

    யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று ராமர் யோசித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அகஸ்திய முனிவர், ராமனிடம் வந்து பேசத் தொடங்கினார்.

    பெரும் தோள்வலி படைத்தவனே, ராமா! என்றுமே அழியாத ஒரு ரகசியத்தை உனக்கு உரைக்கின்றேன். கேள், நான் கூறப்போவது ஆதித்ய ஹ்ருதயம் என்கிற துதி.

    இது சாஸ்வதமானது, புனிதமானது, அழிவற்றது, எல்லா பாவங்களையும், ஒழிக்க வல்லது, எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது, மன குழப்பத்தையும், துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது, ஆயுளை வளர்க்க வல்லது, பெறும் சிறப்பு வாய்ந்தது.

    தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், உலகுக்கே ஒளி தருபவனும், தினம் தவறாமல் தோன்றுபவனுமான உனது இஷ்வாகு குல தெய்வமான சூரியனைப் பற்றிய துதி இது.

    உலகை மட்டுமல்லாமல் தேவர்களையும் கூட வாழ்விப்பவர் சூரிய பகவான், அவரே பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், அவரே கந்தன், ப்ரஜாபதி, இந்திரன், குபேரன், அவரே காலன், யமன், சோமன், வருணன், அவரே அனைத்து பித்ருக்களும் ஆவர்.

    அவரே அஷ்ட வஸக்கள் ஆவாதர், அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி, பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே, உலகின் மூச்சுக் காற்று அவரே, என்று தொடங்கிய சூரிய பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டது.

    • காலைக் கதிரவனை தரிசிப்பதற்கும், வணங்குவதற்கும் பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் அளிக்கின்றது.
    • மிகப் பண்டைக்காலம் முதல் மனிதன் ஆராதித்து வந்த ஒன்றுதான் சூரியன்.

    காலைக் கதிரவனை தரிசிப்பதற்கும், வணங்குவதற்கும் பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் அளிக்கின்றது.

    மாலை வேளையில் சூரியனைப் பார்ப்பதும் சூரிய ஒளியை ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்று ஒரு மூதுரை உண்டு.

    ஆனால் சூரியனை பார்க்க கூடாத, விலக்கப்பட்ட நேரங்களைப் பற்றியும் ஆசாரியர்கள் போதித்துள்ளனர்.

    "சூரியனென்றொரு நட்சத்திரம் பூமியென்றொரு கோணம்" என்று பண்டைக்காலத்தவர் கூறியதுண்டு.

    இது பிரபஞ்ச கோடியின் சாஸ்திர அறிவியலின் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவது.

    விண்வெளியில் அளவிட முடியாத வண்ணம் உலாவும் சூரியனென்ற அற்புதத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் நாம் கேட்டிருப்போம்.

    மிகப் பண்டைக்காலம் முதல் மனிதன் ஆராதித்து வந்த ஒன்றுதான் சூரியன்.

    இதற்கு உதாரணமாக விளங்குகின்றது ஒரிசா மாநிலத்தில் கொனார்க்கில் சூரியன் கோவில்.

    பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொள்ளும் சூரியன் மிக மிக வெப்பமானது.

    • ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.
    • ஜோதிடத்தில் “கர்ப்பச்செல்” என்று குறிப்பிடுவார்கள்.

    காரகத்துவம் என்றால் அவருடைய ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள், அவருடைய சுபாவம், நேச்சர் என்றும் கூறலாம், கேரக்டர் என்றும் கூறலாம்.

    சூரியனை ஆத்மகாரகன், பித்ரு (தந்தை) காரகன் என்று சொல்வோம்.

    ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.

    சூரியனைக் கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.

    சூரிய தசா

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் ஜனித்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும்.

    சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள்.

    தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும்.

    இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும்.

    மேற்கூறிய நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, நட்சத்திரத்தை எவ்வளவு பாகம் கடந்துள்ளதோ அவ்வளவு விகிதம் தசையில் கழிவு ஏற்படும்.

    ஜோதிடத்தில் "கர்ப்பச்செல்" என்று குறிப்பிடுவார்கள்.

    சூரிய தசையில் சூரியன்-காரகத்துவம் என்ற தலைப்பில் கூறப்பட்ட விஷயங்கள் ஜாதகருக்கு பலன்களாக நடைபெறும், மேலும் ஜாதகரின் ஜென்ம லக்கினத்தைப் பொறுத்து, பாவ அடிப்படையில், சூரியன் தரும் பலன்களும் நடைபெறும்.

    இனி ஜோதிட ரீதியாக சூரியனின் பயோடேட்டாவை பார்க்கலாம்.

    • பிரபஞ்சத்தில் சூரியன் மிகவும் இளையவர் என்று கருதப்படுகிறது.
    • தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும்.

    பிரபஞ்சத்தில் சூரியன் மிகவும் இளையவர் என்று கருதப்படுகிறது.

    4.57 பில்லியன் ஆண்டு களாக தன் கடமையை செய்து வருகிறார்.

    இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தன் கடமையை சூரியன் செய்வார் என்று விண்வெளி விஞ்ஞானிகள், தமது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். சூரியனைப் போல பல கோடி சூரியன்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.

    திருமணத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும், நமது பெற்றோருக்கே பாத பூஜை செய்து வணங்குவது நமது பண்பாடு அல்லவா!

    அதைப்போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்க வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

    ஆனால், நமது நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவருக்கு வாகனமாக 7 குதிரைகள் பூட்டிய தேரை சிம்பாலிக்காக கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    சூரியனை ஆத்மகாரகன், பித்ரு (தந்தை) காரகன் என்று சொல்கிறார்கள்.

    ஒரு ஜாதகனுடைய ஆத்ம பலத்தை சூரியனைக் கொண்டு அறியலாம்.

    சூரியனைக் கொண்டு அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஜாதகருக்கு தொடக்க தசையாக சூரிய தசை வரும்.

    சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள்.

    தொடக்க தசையாக வரும்போது பெரும்பாலும் 6 வருடத்தை விட குறைவாகவே வரும்.

    இடையில் வரும் தசையாக இருந்தால், 6 வருடம் முழுமையாக வரும்.

    • பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.
    • சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.

    பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் கிழமையும் ஆசரிக்க வேண்டும்.

    ஆனாலும் சூரியனுக்கு சிவப்பு பூக்களாலும் இரத்த சந்தனத்தாலும் பூஜை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.

    சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறு விரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு.

    இந்த விரதம் இருப்பவர்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உப்பு, எண்ணை முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    சூரியன் மறையும் நேரத்துக்குப்பின் உணவருந்துவதை நிறுத்தி மறுநாள் உதயம் வரை உபவாசமிருக்க வேண்டும் என்பதே ஞாயிற்றுக்கிழமை விரதத்தின் சிறப்பு.

    இந்த விரதம் சரியானபடி ஆசரித்துள்ளவர் களுக்கு சரும நோய்கள் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம்.

    • வலது நாசியில் சுவாசம் நடைபெறும் அமைப்பே சூரியகலை எனப்படுகிறது.
    • இதன் ஒன்றினாலே சூரியனின் அருளாசியையும், ஆற்றலையும் பெற முடியும்.

    வலது நாசியில் சுவாசம் நடைபெறும் அமைப்பே சூரியகலை எனப்படுகிறது.

    சூரியகலை நடக்கும்போது சூரியனை தரிசனம் செய்து காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லி வணங்குதல் மிகச்சிறப்பான பலன்களை அளிக்கும்.

    பெரிய சித்திகள் கூட சித்திக்கும் ஆற்றலை அளிக்கும் சூரியகலையில் சூரிய தரிசனம் செய்து நமஸ்காரம் செய்வதால்!

    இங்கு நமஸ்காரம் என்பது வேறெதும் யோகாசனங்கள் போன்று அல்ல!

    சூரியனைக் கண்ணால் பார்த்து, கைகூப்பி, மனதால் நினைத்து துதி செய்து வணங்குதலே இங்கு யாம் கூறும் சூரிய நமஸ்காரம் ஆகும்.

    இதன் ஒன்றினாலே சூரியனின் அருளாசியையும், ஆற்றலையும் பெற முடியும்.

    ×