search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்சில் உள்ள நன்மைகள்"

    • ஓட்ஸ் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.
    • ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது.

    ஓட்ஸ் ஒரு தானியமாகும், அதன் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, அதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச் சரியான தீர்வாக காணப்படுகின்றது. காலை உணவு எப்போதும் ஆரோக்கியமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். சிலர் இதை பின்பற்றுகிறார்கள்.

    இப்போது நீங்களும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட விரும்பினால், உங்கள் சுவையில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால், அதற்கு சரியான தீர்வு ஓட்ஸ்தான். இதை சாப்பிடுவதால் உங்கள் வயிறு நிரம்புவதுடன், வேலை செய்ய போதுமான சக்தியும் கிடைக்கும். இது பல வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இவை மிகவும் ஆரோக்கியமானவை. காரம், இனிப்பு என பல வகைகளில் செய்யலாம்.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

    ஓட்ஸ் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஓட்சில் பீட்டா குளுக்கான் உள்ளது, இது உணவை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது.

    ஓட்ஸ் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சருமம் என்றும் இளமையாக இருக்க துணைப்புரிகின்றது.

    ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம், புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களைத் தவிர்க்கலாம். ஓட்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது, இதன் உதவியுடன் புற்றுநோயை ஊக்குவிக்கும் கூறுகள் குறைக்கப்படுகின்றன.

    ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்சில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இந்த பிரச்சனைகளை நம்மிடமிருந்து விலக்கி வைக்கிறது.

    ஓட்ஸ் கிரீம்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஓட்சில் வைட்டமின் சி காணப்படுகிறது, இது உங்களை கருமை நிறத்தில் இருந்து பாதுகாக்கிறது. முகத்தில் அதிக அளவு மெலனின் இருப்பதால், கருமை பிரச்சனை அதிகரிக்கிறது, ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

    ஒரு ஆய்வின் படி, ஓட்ஸ் சாப்பிடுவது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். ஓட்ஸில் புரதம், சிலிக்கான், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது எலும்புகளுக்கு பெரும் பலன்களைத் தருகிறது.

     30 கிராம் ஓட்ஸை வேகவைத்து, அதில் அரை கப் தயிர் சேர்த்து, வெங்காயம், தக்காளித் துண்டுகள் சேர்த்து, கடுகு தாளித்து அப்படியே காலை உணவுக்குச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடப் பிடிக்காதவர்கள், 30 கிராம் ஓட்ஸ், ஏதேனும் ஒரு பழம், ஒரு டேபிள்ஸ்பூன் சியா சீட்ஸ், இரண்டு பாதாம், இரண்டு வால்நட்ஸ், ஒரு டீஸ்பூன் பூசணி விதைகள் எல்லாம் சேர்த்து ஸ்மூத்தி போன்று எடுத்துக் கொள்ளலாம். எனவே, நீங்கள் சாப்பிடும் அதே ஓட்ஸை, இப்படி வேறு வேறு வகைகளில் மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள் ஆரோக்கியமாகவும் உணர்வீர்கள், எடையும் அதிகரிக்காது.

    • ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது.
    • ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.

    சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்ய ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது. 100 கிராம் ஓட்சில் கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து, 68 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் புரதம் மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பர போன்ற தாதுக்களும் இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி சாப்பிட்டபின் ரத்தத்தில் குளுக்கோஸ் உடனே உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.

    இதில் உள்ள பீட்டா குளுகான்' என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும், 'அவான்என்திரமைட் என்ற அல்கலாய்டு செல்களில் அழற்சியை தடுப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் ஓட்ஸ் சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் பசி குறைந்து, அடிக்கடி நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவும். இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவு. ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.

     பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்சை அறியாமையால் வாங்கி உட்கொண்டு, ஆரோக்கியத்துடன் இருப்பதாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. ஓட்சில் 'ஸ்டீல் கட் ஒட்ஸ்', 'ரோல்டு ஓட்ஸ், 'இன்ஸ்டன்ட் ஓட்ஸ்' என்று மூன்று வகை உள்ளது. இதில் பதப்படுத்தப்படாத ஒட்ஸ் ஸ்டீல் கட் ஒட்ஸ் ஆகும். இதன் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் 53. கொஞ்சம் பதப்படுத்திய ரோல்டு ஓட்சின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 57 ஆகும்.

    மூன்றாவது வகையான இன்ஸ்டன்ட் ஓட்ஸ் அதிகமாக பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதால், இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் 83 என்ற மிக அதிக மான அளவை அடைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு இதை சாப்பிட்டவுடன் உடனே ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் ஸ்டீல் கட் ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

    ஆனால், இன்ஸ்டன்ட் ஒட்சின் கிளைசிமிக் இன்டக்ஸ் மிக அதிகம் என்பதால், இதனை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்தமுறை கடையில் ஓட்ஸ் வாங்கும் பொழுது ஸ்டீல் கட் ஓட்ஸ் அல்லது ரோல்டு ஓட்சை வாங்கி பயன் படுத்துங்கள். இன்ஸ்டன்ட் ஓட்சை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    ×