search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎம்சி ஆதரவாளர்கள்"

    • சந்தேஸ்காலி பகுதியில் வன்முறை வெடித்ததால் 144 தடையுத்தரவு அமலில் உள்ளது
    • ஊடகங்களுக்கும் காவல்துறை தடையிட்டு பகுதி முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது

    மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) சார்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்கத்தில் கவர்னராக சிவி ஆனந்த போஸ் பதவி வகித்து வருகிறார்.

    மம்தாவின் அரசுக்கும் கவர்னருக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்து வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் அம்மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட சந்தேஸ்காலி (Sandeskhali) பகுதியில், ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை ஷேக் ஷாஜகான் (Sheikh Shajahan) எனும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் ரெய்டு நடத்த சென்றது. அங்கு அவரது ஆதரவாளர்களால் அமலாக்க துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.

    ஷேக் அமலாக்க துறையிடம் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை அமலாக்க துறை தேடி வருகிறது.

    இது தொடர்பாக பா.ஜ.க. ஆதரவாளர்களுக்கும், ஷேக்கின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை வெடித்தது.

    இதனையடுத்து அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க.வை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, அங்கு மனித உரிமைகள் பறி போவதாகவும், நிலைமையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.

    இந்நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து அறிய இன்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் அப்பகுதிக்கு விரைந்தார்.

    ஆனால், செல்லும் வழியிலேயே அவரது பாதுகாப்பு வாகனங்களை ஷேக்கின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அவரது காரின் அருகே பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினார்.

    பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ள காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×