என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாய்லெட்டை தூய்மைபடுத்தல்"
- ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- குளியலறை, சமையலறை பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம்.
50 கிராம் அளவு பாமாயிலை கடாயில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 15 கொத்து வேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது வேப்பிலை நன்கு வெடிக்க ஆரம்பிக்கும். சற்று தூரமாக நிற்பது நல்லது. இல்லையென்றால் மூடி வைத்து விடலாம். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து வேப்ப இலைகளை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ரசக்கற்பூரத்தை உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
வீட்டில், இந்த எண்ணெயை சிறு சிறு ஸ்பான்ச் துண்டுகளின் மீது சிறிதளவு ஊற்றினால் ஸ்பான்ச் எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளும். இந்த ஸ்பான்ச் துண்டுகளை, கழிவறை, குளியலறை, சமையலறை, உள்ளிட்ட பல்லி அதிகமாக வரும் இடங்களில் வைத்து விடலாம். இப்படி செய்தால் பல்லி வரவே வராது.
டாய்லெட்டில் துர்நாற்றம் நீங்க
ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் அளவு ஏதாவது டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு இதனுடன் ஒரு டீஸ்பூன் ஆப்ப சோடாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். முகத்தில் போடக்கூடிய பவுடர் இரண்டு டீஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதை மிக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். நாம் எடுத்துக்கொண்ட அளவுக்கு 4 முதல் 5 உருண்டைகள் கிடைக்கும். இதை 1 மணி நேரம் காய வைக்க வேண்டும்.
வீட்டின் குளியலரை, டாய்லெட் உள்ளிட்ட இடங்களில் இந்த உருண்டையை போட்டு வைத்தால் நறுமணமாக இருக்கும். மேலும் டாய்லெட்டின் ப்ளஷ் டேங்கில் இதில் இரண்டு மூன்று உருண்டைகளை போட்டு வைப்பதன் மூலம், இது ஒவ்வொரு முறை ஃப்ளஷ் செய்யும் போதும் தண்ணீரில் சிறிது சிறிதாக கரைந்து வரும். இதனால் கறை படியாமல் இருக்கும்.