என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண்ணாடி தானம்"
- தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.
- ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.
கண்ணாடி தானம்
பவுர்ணமி தினம் மிக, மிக சக்திவாய்ந்தது என்பதால் தான் அன்று விரதம் இருக்கவும், சிறப்பு பூஜைகள் செய்யவும் பெரும்பாலானவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்ககள்.
ஆனால் பவுர்ணமியன்று பூஜை, வழிபாடுகளுடன் தானம் செய்தால் தான் 100 சதவீத புண்ணியம் கிடைக்கும்.
தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.
அந்த வகையில் பவுர்ணமி நாட்களில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.
ஏதோ ஒரு பவுர்ணமிக்கு மட்டும் கொடுத்தால் போதாது.
ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும்.
ஆடி அல்லது மாசி மாதம் கண்ணாடி தானம் கொடுப்பதை தொடங்கலாம்.
இந்த தானத்தை வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை, துளசி தனம் வைத்து தானம் கொடுக்க வேண்டும்.
இந்த தானம் கொடுப்பதின் நோக்கம், கண்ணாடியில் நமது முகம் தெரியும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
கண்ணாடியில் தெரியும் நமது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நமது அகத்தை அதாவது மனதை அழகாக வைத்து கொள்ள வேண்டும்.
இப்படியாக அகத்தின் அழகை முகத்தில் காட்டும் கண்ணாடியை தானம் கொடுப்பவர்களும், தானம் வாங்குபவர்களும், மனதை நிர்மலமாகவும், அதாவது தூய்மையாகவும், அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி கொடுத்து வருகிறார்கள்.