search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்பூசணியில் உள்ள நன்மைகள்"

    • ஒரு கப் தர்ப்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
    • தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

    கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து பெறுவதற்கு தர்ப்பூசணி மிகச்சிறந்த பழமாக திகழ்கிறது. தர்ப்பூசணியில் 90 சதவிகிதத்திற்கு மேல் நீர்ச்சத்து நிறைந்துஇருக்கிறது. ஒரு கப் தர்ப்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

    இதனுடைய சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசீமிக் இன்டக்ஸ்) 72 ஆகும். எனவே சர்க்கரை நோயாளிகள் தர்ப்பூசணியை மிக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    இதில் வைட்டமின் சி. ஏ.பி6 போன்ற ஊட்டச்சத்துக்களும், பொட்டாசியம் மெக்னீசியம் போலேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் அதிகமாக உள்ளன. மேலும் தர்ப்பூசணியில் லைக்கோபின் மற்றும் சிட்ருலின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ் இருக்கின்றன, இதில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண ஆற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது.

    தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் தோல் வறட்சி ஏற்படாமல் தடுத்து அரிப்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தர்ப்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் சிட்ருலின் தசை பிடிப்பு மற்றும் தசை வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

    தர்ப்பூசணியை உணவுக்குப் பின் சாப்பிடுவதை விட இடைப்பட்ட உணவாக (ஸ்நாக்ஸ்) உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் மிகாமல் தர்ப்பூசணி உட்கொள்ளலாம் பொதுவாக பழங்களை இயற்கையாக உண்ணுவது ஜூஸ் வடிவில் குடிப்பதை விட நல்லது.

    ×