என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர் கழகம்"
- , "எம்.ஜி.ஆர். கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார்.
- ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் 98- வது வயதில் மரணம் அடைந்து உள்ளார்.
எம்ஜிஆர் கழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் (ஆர்.எம்.வீ)1926 செப்டம்பர் - 9 ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிவல்லத்திரா கோட்டையில் பிறந்தார்.
இவர் பிரபல அரசியல்வாதி,மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். திரைக்கதை எழுத்தாளர் ஆவார் . ஆர்.எம்.வீரப்பன் 1956 மார்ச் 12 -ல் ராஜம்மாள் என்ற பெண்ணை திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்தார். அறிஞர் அண்ணா தலைமையில் தமிழ் முறைப்படி இந்த திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்
1977 முதல் 1996 வரை 5 முறை கேபினட் அமைச்சராக பணியாற்றி உள்ளார். சட்டப் பேரவையின் அவைத் தலைவராகவும், அ.தி.மு.க.வின் சட்டப் பேரவைத் தலைவராகவும் இருந்தார். 70 மற்றும் 80 -களில் அதிமுக அரசியலின் சாணக்கியர் என்றும் அழைக்கப்பட்டார்.
1964 -ல் ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் என்ற பெயரில் "தெய்வ தாய்" திரைப்படம் தயாரித்தார். இப்படத்தில் எம்ஜிஆர்- சரோஜா தேவி ஜோடியாக நடித்தனர். அதைத் தொடர்ந்து நான் ஆணையிட்டால் , காவல்காரன் , கண்ணன் என் காதலன் , இதயக்கனி, ரிக்ஷாக்காரன் ,காதல் பரிசு , காக்கி சட்டை , ராணுவ வீரன் , மூன்று முகம் , தங்க மகன் , ஒரு காவலன் , பணக்காரன் , மந்திரபுன்னகை ,
புதியவானம் ,பாட்ஷா , உள்ளிட்ட படங்களை தயாரித்தார். இதில் ரஜினி நடித்த பாட்ஷா படம் வசூல் சாதனை படைத்தது. 1971 தேர்தலில் அறிஞர் அண்ணாவின் திமுக சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்ய ரிக்ஷாக்காரன் திரைப்படம் பயன்படுத்தப்பட்டது.
1972-ல் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறினார்.அப்போது ரசிகர் மன்றங்களை அமைத்து அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்க எம்.ஜி.ஆருக்கு உதவினார்.
மூத்த மகள் செல்வி, சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜனை திருமணம் செய்தார். 1984 -ல், எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டிருந்த போது, கட்சி நடவடிக்கைகளை, தேர்தல் பிரசாரத்தை, ஆர்.எம்.வி., கவனித்தார்.
1987-ல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, கட்சி 2 அணிகளாக உடைந்தது, அங்கு அவர் தலைமையில் பெரிய அணி இருந்தது. வி.என்.ஜானகியை முதலமைச்சராக்க 98 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றார். அதன் பின் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்து, கட்சியின் இணைப் பொதுச் செயலாளராக இருந்தார்.
'பாட்ஷா' பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு துறை அமைச்சராக பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி ஆர்.எம்.வீரப்பன் தொடங்கினார். தற்போது வரை அந்த கட்சியை அவர் நடத்தி வந்தார்.
கடந்த சில நாட்களாக ஆர்.எம். வீரப்பன் உடல் நலக்குறைவுடன் காணப்பட்டார். அதை தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று தனது 98- வது வயதில் மரணம் அடைந்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்