என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜோதி ஆம்கே"
- வீடியோவில், இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
- 7 அடி, 1 அங்குலம் கொண்ட கிரேட் காளி, 2 அடி ¾ அங்குலம் கொண்ட ஜோதி ஆம்கேவை ஒற்றை கையால் தூக்கிய காட்சிகளை பயனர்கள் ரசித்தனர்.
இந்தியாவை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரரான தி கிரேட் காளி, உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என பெயர் பெற்ற ஜோதி ஆம்கேவை சந்தித்து பேசிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
பஞ்சாபை சேர்ந்த கிரேட் காளி 2006-ம் ஆண்டு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை பெற்று பிரபலம் ஆனவர். தற்போது போட்டிகளில் பங்கேற்பதை குறைத்து கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் மிகவும் குள்ளமான பெண்ணான ஜோதி ஆம்கேவை சந்தித்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் காட்சிகளை பார்த்த பயனர்கள் ஆச்சரியம் அடைந்தனர். 7 அடி, 1 அங்குலம் கொண்ட கிரேட் காளி, 2 அடி ¾ அங்குலம் கொண்ட ஜோதி ஆம்கேவை ஒற்றை கையால் தூக்கிய காட்சிகளை பயனர்கள் ரசித்தனர்.
வீடியோ முழுவதும் ஜோதி ஆம்கே சிரித்துக் கொண்டே இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கோடிக்கணக்கான பயனர்களின் பார்வையையும், 20 லட்சத்திற்கும் அதிகமானவரின் விருப்பங்களையும் குவித்து வருகிறது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று தேர்தல்.
- அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் வாக்குப்பதிவு.
நாடு முழுவதும் இன்று 21 மாநிலங்கள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படும் ஜோதி ஆம்கே நாக்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார்.
2009-ம் ஆண்டில், ஜோதி ஆம்கேக்கு உலகின் 'உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3 அங்குலமாக இருந்தது.
தற்போது, ஜோதிக்கு 30 வயதாகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்